in

செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட பி-ஏரியில் அமைக்கப்பட்டுள்ள நடைபயிற்சி பாதையில் மின்விளக்குகள் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்

செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட பி-ஏரியில் அமைக்கப்பட்டுள்ள நடைபயிற்சி பாதையில் மின்விளக்குகள் இல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்

உடனடியாக மின்விளக்கு வசதி ஏற்படுத்தித் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட திருவண்ணாமலை சாலையில் அமைந்துள்ள பி-ஏரியை சுற்றுலாத் தளமாக மேம்படுத்துவதாக கடந்த ஆட்சிக் கால தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அம்ரித் 2.0 திட்டத்தின் கீழ் கடந்த 2022 – ஆம் ஆண்டு ரூ.1 கோடியே 93 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் நடைபாதை மற்றும் மின்விளக்குகளுடன் ஏரிப்பகுதியை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன.

ஆனால், தற்போது நடைபாதை மட்டும் அமைக்கப்பட்ட நிலையில், இதுவரை மின்விளக்குகள் பொருத்தப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால் அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ளும் முதியோர், பெண்கள் மற்றும் குழந்தைகள் கைகளில் டார்ச் லைட் ஏந்தியபடி நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், இருள் சூழ்ந்திருப்பதால் விஷப்பாம்புகள் மற்றும் விஷப்பூச்சிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், பாதுகாப்பு குறித்த அச்சம் நிலவுவதாகவும் கூறுகின்றனர்.

எனவே, பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, நடைபயிற்சி பாதை முழுவதும் உயர்தர எல்.இ.டி. மின்விளக்குகளை உடனடியாக அமைக்க செஞ்சி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்

இதனிடையே, ஏரிக்கரையில் பூங்கா அமைக்கும் பணியும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

எனவே, மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நடைபயிற்சி பாதையில் உடனடியாக மின்விளக்குகள் அமைக்கவும், மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

நத்தம் அருகே ந.புதுக்கோட்டை முத்தாலம்மன், பாதகருப்பு கோயில் புரவி எடுப்பு விழா

குத்தாலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு பருத்தி விவசாயிகள் சாலைமறியல்