in

பின்னணி பாடகி உமா ரமணன் திடீரென்று மரணம்


Watch – YouTube Click

பின்னணி பாடகி உமா ரமணன் திடீரென்று மரணம்

 

பின்னணி பாடகி உமா ரமணன் திடீரென்று நேற்று மரணம்அடைந்தார்.

பிரபல பின்னணி பாடகையான உமா ரமணன் 1980 ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் என்ற படத்தில் பூங்கதவே தாழ் திறவாய் என்ற பாடலின் மூலம் பிரபலமானார்.

அதன் பிறகு ஆனந்த ராகம் கேட்கும் காலம், பூபாளம் இசைக்கும், கஸ்தூரி மானே, போன்ற பாடல்களின் மூலம் ரசிகர் மத்தியில் பிரபலமானார்.

இவர் கடைசியாக விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில் கண்ணும் கண்ணும் தான் கலந்தாச்சு என்ற பாடலை பாடியவர்.

பின்னணி பாடகையான உமா ஆயிரக்கணக்கான கச்சேரிகளில் பாடியுள்ளார். ஒரு சில படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சப்த ஸ்வரங்கள்” நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். மேலும்அந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் ஏ.வி. ரமணனின் மனைவி தான் பாடகி உமா ரமணன்.

சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக பல பாடல்களை பாடியவர். சென்னையில் வசித்து வந்த உமாரமணன் சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டவர் நேற்று உயிரிழந்தார்.

அவருக்கு வயது 69  இவரின் இறுதிச்சடங்கு சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை நடைபெறுகிறது. இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

கோடைகால மாணவர்களுக்கான கிரிகெட் விளையாட்டுக்கான சிறப்பு பயிற்சி

நீர் வழி ஓடையைமண்ணைப் போட்டு மூடி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக விவசாயிகள் புகார்