in

ஊர் மக்கள் ஒன்று கூடி மகாத்மா காந்தி நினைவு அஞ்சலி


Watch – YouTube Click

ஊர் மக்கள் ஒன்று கூடி மகாத்மா காந்தி நினைவு அஞ்சலி

 

மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு ஊர் மக்கள் ஒன்று கூடி அவர் சுட்டு கொல்லப்பட்ட நேரத்தில் அஞ்சலி செலுத்தினர்

திருவாரூர் நகரத்திற்குட்பட்ட மடப்புரம் பெருமாள் கோவில் அருகில் மகாத்மா காந்தியடிகளின் 77 வது நினைவு நாள் மற்றும் தியாகிகள் தினத்தை முன்னிட்டு காந்தியடிகள் சுடப்பட்ட நேரமான 5.17 மணிக்கு அப்பகுதி பொதுமக்கள் ஒன்றிணைந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டனர்.

மடப்புரம் பாரதி மக்கள் மன்றம் சார்பில் கடந்த 43 வருடங்களாக மகாத்மா காந்தியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த வருடத்திற்கான மகாத்மா காந்தியின் நினைவு நாள் மற்றும் தியாகிகள் தினத்தை அனுசரிக்கும் வகையில் நகர் மன்ற உறுப்பினர்கள் எஸ்.என் அசோகன் மற்றும் ஜி.வரதராஜன் தலைமையில் அப்பகுதி பொதுமக்கள் சமூக செயற்பாட்டாளர்கள் பத்திரிகையாளர்கள் தொழிலதிபர்கள் பல்வேறு அரசியல் கட்சி மற்றும் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பொதுமக்கள் என பல தரப்பினரும் இணைந்து மகாத்மா காந்தியின் நினைவு தினம் மற்றும் தியாகிகள் தினத்தை அனுசரிக்கும் வகையில் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட மாலை 5.17 மணிக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் ஒன்று கூடி தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழியையும் எடுத்துக் கொண்டனர்.மேலும் சுதந்திர போராட்டத்திற்காக உயிர் நீத்த தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் மகாத்மா காந்தியடிகளின் உருவப்படத்திற்கும், மறைந்த பாரதி மக்கள் மன்ற நிறுவனத் தலைவர் சுபாஷ் காந்தி உருவப் படத்திற்கும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் அப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியதுடன் தேசிய ஒருமைப்பாட்டு உறுதி மொழியையும் எடுத்துக் கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

சுகாரதரம் இல்லாமல் உள்ள மருத்துவமனை சட்டமன்ற உறுதிமொழி குழு கேள்வி

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்த வேண்டும்