நத்தம் அருகே ந.புதுக்கோட்டை முத்தாலம்மன், பாதகருப்பு கோயில் புரவி எடுப்பு விழா
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ந.புதுக்கோட்டை முத்தாலம்மன் பாதகருப்பு கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.விழாவையொட்டி ஜூலை 1ஆம் தேதி அழகர் கோயிலில் இருந்து தீர்த்தம் எடுத்துவரப்பட்டு காப்பு கட்டுதளுடன் திருவிழா தொடங்கியது.
இன்று சுவாமி புரவிகள் வத்திபட்டி கிராமத்தில் சிறப்பு பூஜை செய்து கண் திறக்கப்பட்டது.பின்னர் ஊர்வலமாக ந.புதுக்கோட்டையில் உள்ள கோயிலுக்கு முத்தலாம்மன், பாத கருப்பு, பெரியகருப்பு,சின்ன கருப்பு,பெருமாள்சாமி,நொண்டிச்சாமி, கன்னிமார் மதிலை, குதிரை சிலைகள் அதிர்வெட்டு முழங்க, வாணவேடிக்கை, வர்ணக்குடைகளுடன் ஊர்வலமாக முத்தாலம்மன் கோயிலுக்கு வந்தடைந்து.அங்கிருந்து பாதகருப்பு கோவிலுக்கு கொண்டு சென்று வைக்கப்பட்டது.
அங்கு சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தது.
இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்


