in

பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா

பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா

 

நிலக்கோட்டையை அடுத்த எத்திலோடு அருகே, நடுப்பட்டி கிராமத்தில் நூற்றாண்டு பழமையான அருள்மிகு காளியம்மன், பட்டாளம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த எத்திலோடு அருகே தாதரையம்பட்டி,நடுப்பட்டி கிராமத்தில்,நூற்றாண்டு பழமையான அருள்மிகு காளியம்மன்,பட்டாளம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

விழாவில் நேற்று முன்தினம் பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் தாரதப்பட்டை வானவேடிக்கைகள் முழங்க ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு,பிரம்மாண்ட யாகசாலையில் வைத்து கணபதி பூஜை, லஷ்மி ஹோமம், கோபூஜை,நவகிரக பூஜை உள்ளிட்ட ஆறு கால யாகவேள்வி தீபாதாரணை பூஜைகள் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று கடாரம் புறப்பாடு நிகழ்ச்சியில்,ஸ்ரீனிவாச நரசிம்மா சர்மா ஸ்வாமிகள் தலைமையிலான சிவாச்சாரியார்கள், சுரேஷ் பவுன் தலையிலான குருக்கள் வேத மந்திரங்கள் முழங்க ராஜகோபுர கலசத்திற்கு புனிதநீர் தெளித்து கும்பாபிஷேகம் செய்து வைத்தனர், அதனைத் தொடர்ந்து பரிவார தெய்வங்களான மகா சக்தி செல்வ விநாயகர், கதிர்வாடன், பெருமாள், சீலைகாரியம்மன் கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.

இதனையடுத்து பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது,இந்த நிகழ்வின் போது கருட பகவான் வட்ட மட்டத்தை கண்ட பொதுமக்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற விண்ணை முட்டும் கோஷங்களை எழுப்பி அம்மனை வழிபட்டனர்.

இந்த விழாவிற்கு பள்ளப்பட்டி, நிலக்கோட்டை, சோழவந்தான், வத்தலக்குண்டு, சின்னாளப்பட்டி, வாடிப்பட்டி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர், விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் அறுசுவை அன்னதான வழங்கப்பட்டது, விழா ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள், விழா கமிட்டியினர் மற்றும் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

What do you think?

மூல நட்சத்திரம் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம்

காஞ்சிபுரம் மன்னார் சாமி பச்சையம்மன் ஆலய அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்