நகை அடகு கடையில் கடப்பாரையால் சுவற்றைத் துளையிட்டு திருடு முயன்ற மர்ம நபர்கள்
நத்தம் மீனாட்சிபுரம் பகுதியில் நகை அடகு கடையில் கடப்பாரையால் சுவற்றைத் துளையிட்டு திருடு முயன்ற மர்ம நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வேலாம்பட்டியை சேர்ந்த 50வயது நபர்கள் ஒருவர் நத்தம் மீனாட்சிபுரம் பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார்.இவர் நேற்று(08-08-2026) இரவு வழக்கம்போல் கடையை சாத்திவிட்டு வீட்டுக்கு சென்ற நிலையில் நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் துண்டை கொண்டு முகத்தை மறைத்துக் கொண்டு வந்த மூன்று மர்ம நபர்கள் கடையின் சுவற்றை கடப்பாரையால் துளையிட முயன்றுள்ளனர்.சுமார் ஒரு மணி நேரம் முயற்சித்தும் முடியாத நிலையில் அந்தப் பகுதியில் ஆட்களை வருவதைப் பார்த்துஅங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.இது குறித்தான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.