in

பழனியில் 2 கடைகளில் அடுத்தடுத்து திருட்டு!

பழனியில் 2 கடைகளில் அடுத்தடுத்து திருட்டு!

 

பழனியில் அடுத்தடுத்து இரண்டு கடைகளில் திருட்டு – பூட்டை உடைத்து கல்லாப்பெட்டியில் இருந்த பணம் கொள்ளை; சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை.

பழனி ரயில் நிலையம் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் உணவகத்தில் வழக்கம்போல் நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் ஊழியர்கள் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். இதனை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர், இரவு நேரத்தில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளார்.

கடைக்குள் சென்ற மர்ம நபர், அங்கிருந்த கல்லாப்பெட்டியை உடைத்து அதில் வைத்திருந்த 5000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளார். வழக்கம்போல் காலையில் உணவகத்தை திறப்பதற்காக உரிமையாளர் வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததையும், கல்லாப்பெட்டி சேதப்படுத்தப்பட்டு இருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து உடனடியாக பழனி நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அதில், இரவு நேரத்தில் மர்ம நபர் ஒருவர் கடைக்குள் நுழைந்து கல்லாப்பெட்டியை உடைத்து பணத்தை எடுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த நபரின் அடையாளம் மற்றும் அவர் வந்த வாகனம் உள்ளிட்ட விவரங்களை போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆய்வு செய்து வருகின்றனர்.

இதேபோன்று பழனி நகரில் மற்றொரு கடையிலும் பூட்டை உடைத்து திருட்டு நடைபெற்றுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அடுத்தடுத்து இரண்டு கடைகளில் ஒரே மாதிரியான முறையில் திருட்டு நடைபெற்றுள்ளதால், ஒரே நபர் அல்லது ஒரே கொள்ளைக் கும்பல் இந்த சம்பவங்களில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பழனியில் அடுத்தடுத்து இரண்டு கடைகளில் திருட்டு நடந்துள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

What do you think?

நாமக்கல் ராசிபுரத்தில் ஆடி மாத தேய்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடு.

வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டம்