மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக முகூர்த்தகால் நடும் விழா
மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது – இன்று காலை 11 மணிக்கு கும்பாபிஷேகம் விழாவிற்கான முகூர்த்தகால் நடும் விழா நடைபெற்றது.

மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் விரைவில் திருக்குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு, இன்று காலை 11.00 மணிக்கு மேல் 12.00 மணிக்குள் வடக்கு ஆடி வீதி ஆயிரங்கால் மண்டபம் அருகில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடைசியாக கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு கும்பாபிஷேக பெருவிழா நடைபெறவுள்ளது.

கடந்த 2018-ல் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வீரவசந்தராயர் மண்டபம் சேதமடைந்தது. இந்த மண்டபத்தின் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன.
கோவில் முழுவதும் உள்ள கோபுரங்கள், தூண்களில் வர்ணம் பூசும் பணிகளும் நடைபெற்றுவருகிறது. கோவிலில் உள்ள 33 ஆயிரம் சிற்பங்களுக்கும் விதிமுறைகளுக்கு உட்பட்டு எண்ணெய் பூச்சுகளும் நடைபெற்றுவருகிறது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


