in

நாமக்கல் ராசிபுரத்தில் ஆடி மாத தேய்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடு.

நாமக்கல் ராசிபுரத்தில் ஆடி மாத தேய்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடு.

நாமக்கல் ராசிபுரத்தில் ஆடி மாத தேய்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடு. அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் முத்துக்காளிப்பட்டி ஏடிசி டிப்போ மலையின் மீது அமைந்துள்ள அறம் வளர்த்த நாயகி சமேத அகர லிங்கேஸ்வரர் ஆலயத்தில் உள்ள சிவபெருமான் மற்றும் நந்தியெம் பெருமானுக்கு ஆடி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

             

What do you think?

புதுச்சேரியில் உள்ள சிறு விவசாயிகள்  முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்

பழனியில் 2 கடைகளில் அடுத்தடுத்து திருட்டு!