மருதம் ஸ்ரீ மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா
மருதம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா விமர்சையாக நடைபெற்றதில் காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் ஆர்வமுடன் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் மருதம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயத்தில் 25 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா முன்னிட்டு கடந்த ஞாயிறன்று அம்மனுக்கு மகா அபிஷேகமும், 108 பால்குடம் அபிஷேகமும் விமர்சியாக நடைபெற்றது.
அதனைதொடர்ந்து நேற்று அம்மனுக்கு வர்ணிப்பு நிகழும், பொங்கல் வைத்தலும் விமர்சியாக நடந்தது.
இந்த நிலையில் இன்று காலை கணபதி ஹோமம், அம்மனுக்கு மகாபிஷேகம் நடைபெற்று, மதியம் கூழ் வார்த்தல் சிறப்பாக நிறைவு பெற்றது.

அதனைதொடர்ந்து மாலை காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தீமிதி திருவிழாவை தொடர்ந்து ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ரமேஷ் விழா குழுவினருடன் இணைந்து சிறப்பாக நடைபெற்ற தீமிதி திருவிழாவை சுற்றுவட்டார கிராமத்திலிருந்து ஏராளமானோர் பங்கேற்று அம்மனை தரிசித்தனர்.

