in

நடிகர் தீனா நடித்த கள்வன் திரைப்படத்தை அவரது கிராமமே பார்த்து கொண்டாடிய நெகழ்ச்சி சம்பவம்.


Watch – YouTube Click

நடிகர் தீனா நடித்த கள்வன் திரைப்படத்தை அவரது கிராமமே பார்த்து கொண்டாடிய நெகழ்ச்சி சம்பவம்.

திருவாரூர் மாவட்டம் நாரணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தீனா. இவர் சின்னத்திரையில் இருந்து திரையுலகுக்கு வந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக கார்த்தியுடன் நடித்த கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதேபோன்று விஜயுடன் நடித்த மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது இதேபோன்று பத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் தீனா நடித்துள்ளார்.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்துள்ள கள்வன் திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் தீனா நடித்துள்ளார். இந்த நிலையில் அவரது கிராமமான நாரணமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஒட்டுமொத்த கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து இன்று திருவாரூரில் உள்ள தைலமைத் திரையரங்கில் கள்வன் படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.

அப்போது அந்த பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கூறுகையில்… எங்கள் பகுதியில் இருந்து ஒரு சிறிய பையனாக சென்று திரையுலகில் இன்று பல சாதனைகளை படைத்தவர் தீனா எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது அவர் நடித்த பல படங்களை நாங்கள் பார்த்துள்ளோம் தற்பொழுது கள்வன் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார் இதேபோன்று பல வெற்றி படங்களை நடித்து எங்களுக்கும் எங்கள் ஊருக்கும் மிகுந்த பெருமை சேர்ப்பார் என மகிழ்ச்சியுடன் கிராம மக்கள் தெரிவித்தனர்.


Watch – YouTube Click

What do you think?

சோதனைக்கு பயப்பட மாட்டேன் திருமாவளவன்

ஊர் முழுவதும் கருப்பு கொடியை கட்டி எதிர்ப்பு காட்டி வரும் இஸ்லாமியர்கள்