in

பச்சை மலை முருகன் ஆலயத்தில் ஆனி செவ்வாய் அபிஷேக ஆராதனை

பச்சை மலை முருகன் ஆலயத்தில் ஆனி செவ்வாய் அபிஷேக ஆராதனை

 

நாமக்கல் பொத்தனூர் பச்சை மலை முருகன் ஆலயத்தில் ஆனி செவ்வாய் அபிஷேக ஆராதனை

நாமக்கல் மாவட்டம் – பரமத்தி வேலூர் – வட்டம் -பொத்தனூர் – மேற்கு வண்ணாந்துறையில் உள்ள பச்சைமலையின் மேல் உள்ள பால தண்டாயுதபாணி சுவாமி ஆலயத்தில் ஆனி மாத செவ்வாய்க்கிழமையினை முன்னிட்டு இன்று பால தண்டாயுதபாணி சுவாமிக்கு, பஞ்சகவ்யம், பால், தயிர், இளநீர், சந்தனாதி தைலம், திருமஞ்சனம், மஞ்சள் பொடி, தேன், நாட்டு சக்கரை, கரும்பு பால், அரிசி மாவு, மா, பலா, வாழை, மாதுளை, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, பேரிச்சம்பழம், திராட்சை, எலும்மிச்சை மற்றும் வாசனை திரவியங்களான பன்னீர், சந்தனம், சொர்ண அபிஷேகமுடன் கலச அபிஷேகம் போன்ற 27 வகையான அபிஷேகங்கள் செய்து சுப்பிரமணியர் அலங்காரம் செய்து, சோடஷ உபசாரம் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து முருகப்பெருமானுக்கு பல வகை வாசனை மலர்களால் 108 அஷ்டோத்திர மந்திரங்களினால் அர்ச்சனை செய்து, அடுக்கு ஆரத்தி, பஞ்ச ஆரத்தி, ஏக ஆரத்தியுடன் மகா கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் மஹா அன்னதானமும் அருட்பிரசாதமும் வழங்கப்பட்டது.

What do you think?

120 பந்தய புறாக்கள் பாம்பன் வடக்கு மீன்பிடி துறைமுகம் அருகே பறிமுதல்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்