நாமக்கல் பரமத்தி வேலூரில் ஆனி மாத பௌர்ணமி மிளகாய் யாகம்
நாமக்கல் பரமத்தி வேலூரில் ஆனி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மிளகாய் யாகம்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தேரடி வீதியில் உள்ள பெத்தாண்டவர் ஆலயத்தில் உள்ள மகா ப்ரத்தியங்கிரா தேவி அம்மனுக்கு ஆனி மாத பௌர்ணமியினை முன்னிட்டு சிறப்பு வரமிளகாய் யாகம் நடைபெற்றது.
விழாவில் நிகழ்வாக ஆலயத்தில் கலசங்கள் ஸ்தாபிக்கப்பட்டு வர மிளகாய் யாகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து யாக வேள்வியுடன் பலவகை சமித்துகள் மற்றும் திரவியங்கள் யாக வேள்வியில் இட்டு மகாபூர்ணாகுதி சமர்ப்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மூலவர் மகா ப்ரத்தியங்கிரா தேவி அம்மனுக்கு பால், தயிர், திருமஞ்சனம், அரிசி மாவு, மஞ்சள், குங்குமம், சந்தனம், பன்னீர் மற்றும் கலச தீர்த்தம் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பஞ்சாரத்தி மற்றும் உதிரிப்பூக்களினால் நாமாவளிகள் கூறி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தீர்த்தம் தெளிக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.


