இரட்டணை ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலய அக்னி வசந்த பெருவிழா
இரட்டணை ஸ்ரீ திரௌபதியம்மன் ஆலய அக்னி வசந்த பெருவிழா – 4-ம் நாள் சந்தன மணமும் வீடுமன் பிறப்பும்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த இரட்டணை கிராமம் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அக்னி வசந்த பெருவிழா கடந்த 26.6.2026 அன்று வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
மேலும் நான்காம் நாள் நிகழ்வாக சந்தன மணமும் விடூமன் பிறப்பை முன்னிட்டு வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ கிருஷ்ணர் மற்றும் ஸ்ரீ பஞ்சபாண்டவர்கள் மற்றும் திரௌபதியம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

தொடர்ந்து கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டு கோயில் உட்பிரகாரம் வலம் வந்து வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் இரவு கிராம வீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்றைய நிகழ்ச்சிக்கான உபயோதாரர் சந்திர தெரு வகையறா.


