in

தேவி ஸ்ரீ கடை வாசல் மாரியம்மன் திருக்கோவிலின் ஆடிப்பூர விழா

தேவி ஸ்ரீ கடை வாசல் மாரியம்மன் திருக்கோவிலின் ஆடிப்பூர விழா

 

கிருஷ்ணகிரி பழையப்பேட்டையில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ கடை வாசல் மாரியம்மன் திருக்கோவிலின் ஆடிப்பூர விழாவினை பால்குடம் ஊர்வலத்தில் ஏராளமான பெண்கள் பால்குடங்களுடன் பங்கேற்பு.

கிருஷ்ணகிரி பழையப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ சுந்தர வினையகர் மற்றும் அருள்மிகு தேவிஸ்ரீ கடை வாசல் மாரியம்மன் திருக்கோவிலில் 43-ம் ஆண்டு ஆடித்திருவிழா கடந்த ஆடி 1-ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைப்பெற்று வந்தது.

இதில் நாள்தோறும் கடை வாசல் மாரியம்மன் மற்றும் செல்வ வினாயகருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகளும் , அலங்கார பூஜைகளும் நடைப்பெற்று வந்தது இவ்விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத் திருவிழா பல்வேறு கட்ட பூஜைகளுடன் நடைப்பெற்றது.

இதன் முன்னதாக நூறுக்கு மேற்பட்ட பெண்கள் கிராமிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் மேளத்தாளங்களுடன் பால்குடம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

பின்னர் திருக்கோவிலில் வீந்துருக்கும் ஸ்ரீ சுந்தர வினையகர் மற்றும்
அருள்மிகு தேவிஸ்ரீ கடை வாசல் மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தும் உலக மக்கள் யாவரும் நலமுடன் வாளவும், நல்ல மழை பொழித்து விவசாயம் செழித்திட வேண்டி வழிப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரப் பூஜைகளும் தற்பூர ஆராதனைகளும் நடைப்பெற்றது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த ஸ்ரீ சுந்தர வினையகர் மற்றும் அருள்மிகு தேவிஸ்ரீ கடை வாசல் மாரியம்மனை தரிசனம் செய்து வழிப்பட்டனர்.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை பழையப்பேட்டை வாணியர் குல மக்கள் மற்றும் இளைஞர் அணியினர்களும் சிறப்பாக செய்து இருந்தனர்.
விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

What do you think?

நெய்வேலியில் 33-ஆம் ஆண்டு ஸ்ரீ வெற்றி விநாயகர் ஆலய விநாயகர் சதுர்த்தி விழா – ஆலோசனை கூட்டம்

ஆயுதப்படை மைதானத்தில் நடந்த 80 வது ஆண்டு சுதந்திர தின விழா