in

 ஸ்ரீ ராகவேந்திர சுவாமி 355-வது ஆராதனா மஹோத்சவம்

 ஸ்ரீ ராகவேந்திர சுவாமி 355-வது ஆராதனா மஹோத்சவம்

 

355-வது ஆராதனா மஹோத்சவம்: ராகவேந்திர சுவாமி மடத்தில் சிறப்பு அபிஷேகம்.

ஓசூர் சந்தேப்பேட்டை ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் விமரிசையாக தொடங்கிய ஆராதனா விழா – தங்கம் கவச அலங்காரத்தில் சுவாமி அருள்பாலிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சாந்தேப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில், ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் 355-வது ஆராதனா மஹோத்சவ விழா சிறப்பாக தொடங்கியது.

ஆராதனா மஹோத்சவத்தின் இரண்டாம் நாளான இன்று, ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளுக்கும், உற்சவ மூர்த்தியான ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடரமண சுவாமிக்கும், ஆஞ்சநேயர் மற்றும் சீதா–ராம–லட்சுமணர் ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து பால், தயிர், தேன், இளநீர், மாதுளை, ஆரஞ்சு உள்ளிட்ட பல்வேறு திரவியங்கள் மற்றும் பழ வகைகளைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் திருமஞ்சனம் நடைபெற்றது.

அபிஷேகம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டது. இதேபோல் உற்சவ மூர்த்திகளுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கப்பட்டது.

வெள்ளிக் கவச அலங்காரத்தில் அருள்பாலித்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்

What do you think?

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி