நாமக்கல் பரமத்தி வேலூர் ராஜராஜேஸ்வரி ஐயப்பன் மடாலயத்தில் மழை வேண்டி மகா வருணயாகம்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அக்ரஹாரம் காவேரி சாலையில் உள்ள ராஜராஜேஸ்வரி ஐயப்பன் ஆஸ்ரமத்தில் உலக நலன் மற்றும் மழை வேண்டி மகா வருண யாகம் சிறப்பாக நடத்தப்பட்டது. விழாவின் நிகழ்வாக காலை ராஜராஜேஸ்வரி ஐயப்பன் ஆஸ்ரமத்தில் கலசங்கள் ஸ்தாபிக்கப்பட்டு யாக வேள்விகள் நடைபெற்றது.
யாக வேள்வியில் சமித்துக்கள் மற்றும் திரவியங்கள் இடப்பட்டு நிறைவாக மகாபூர்ணாகுதி சமர்ப்பிக்கப்பட்டது. பின்பு கலச நீர் ப்ரோச்சனம் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் தீர்த்த தெளிக்கப்பட்டு அருட்பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டினை ராஜராஜேஸ்வரி ஆஸ்ரம நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

