in

ஆசிரியர் மீது சாதி ரீதியாக மிரட்டல் விடுத்ததாக பள்ளி பொருளாளர் மீது ஆசிரியர்கள் புகார்*

ஆசிரியர் மீது சாதி ரீதியாக மிரட்டல் விடுத்ததாக பள்ளி பொருளாளர் மீது ஆசிரியர்கள் புகார்*

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் சுகந்தி சேவேரியார் இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் (செவன்த் டே அட்வண்டிஸ்ட்) கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியராக பணி புரிந்து வருகிறார் .

இந்த நிலையில் பள்ளியின் பொருளாளர் டேனியல் ஜேம்ஸ் என்பவர் ஆசிரியர்களை ஒருமையில் பேசி மிரட்டல் விடுப்பதாக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆசிரியர் சுகந்தி சேவேரியார் கடந்த வாரம் புகார் அளித்திருந்தார்

பள்ளிக்கு மதுபோதையில் வருவதாகவும், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களிடையே ஒருமையில் பேசுவது கூறும் நிலையில் பெண் ஆசிரியருக்கு ஆதரவாக பள்ளி பொருளாளர் டேனியல் ஜேம்ஸ் இடம் விளக்கம் கேட்கச் சென்ற அப் பள்ளியை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் ரவிக்குமாரை சாதி ரீதியாக துன்புறுத்தி பள்ளியிலிருந்து இடம் மாற்றும் செய்து விடுவேன் என மிரட்டுவதாக குற்றச்சாட்டு தெரிவித்தார்

இந்த நிலையில் பெண் ஆசிரியர்கள் மீது ஒருமையில் பேசி மிரட்டல் விடுத்த நிலையில் அது குறித்து புகார் அளித்த இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பெண் ஆசிரியருக்கு ஆதரவாக விளக்கம் கேட்க சென்ற ஆசிரியர் மீதும் சாதி ரீதியாக துன்புறுத்தி மிரட்டல் விடுத்த பள்ளியின் பொருளாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆசிரியர்கள் தங்களது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்

What do you think?

ஆட்சியிலும் அதிகாரத்திலும் “விசிக” பங்கு என்பதை நிறைவேற்றிய விசிக தலைவர் திருமாவளவனுக்கு பாராட்டு விழா

கோவை கோவையில் நெடுஞ்சாலைத்துறை பொதுப்பணித்துறை வளர்ச்சி திட்டம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வுக்கூட்டம் மேற்கொண்டார்.