in

மதுரையில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பழுது


Watch – YouTube Click

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்கு எண்ணிக்கை மையத்தில் பாதுகாப்பு மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாததால் பரபரப்பு

மதுரை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மருத்துவ கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பாதுகாப்பு அறை முழுவதிலும் சீல் வைக்கப்பட்டு சிசிடிவி கேமராக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது

இங்கு நாள்தோறும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை அவர்களது முகவர்களும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் மத்திய பாதுகாப்பு படை உள்ளிட்ட மற்றும் தமிழக காவல்துறை அதிகாரிகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் திடீரென இன்று மாலை முதல் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாததால் வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்

திடீரென சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாததால் அதிர்ச்சி அடைந்த அரசியல் கட்சியினர் மற்றும் சிகிச்சை வேட்பாளர்கள் இது தொடர்பாக புகார் அளிப்பதற்காக மாவட்ட ஆட்சியரிடம் சென்றுள்ளனர் இதனிடையே இது குறித்து விளக்கம் அளித்த மாவட்ட நிர்வாகம் மழை பெய்த நிலையில் சிசிடிவி கேமராக்கு செல்லக்கூடிய வயர்களில் சிறிது பழுதை ஏற்பட்ட நிலையில் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்


Watch – YouTube Click

What do you think?

நெல்லை மணிமுத்தாறு அணையில் இருந்து மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தண்ணீரை திறந்து வைத்தார்

முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேட்டி