in

545-ம் ஆண்டு குரு பூஜை அபிஷேக ஆராதனை

545-ம் ஆண்டு குரு பூஜை அபிஷேக ஆராதனை

 

நாமக்கல் அருகே ஸ்ரீ கேசவ தீர்ததர் 545-ம் ஆண்டு குரு பூஜையை முன்னிட்டு அபிஷேக ஆராதனை வெள்ளிக் கவச அலங்காரம் – முதல்நாள் பூர்வ ஆராதனைஏராளமான பக்தர்கள் தரிசனம்.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த அனிச்சம்பாளையத்தில் அமைந்திருக்கும் பழமையான ஸ்ரீ ஸ்ரீ கேசவ தீர்த்த மகா சுவாமிகள் பிருந்தாவனத்தில் ஸ்ரீ ஸ்ரீ கேசவ தீர்ததரின் 545 வது குரு பூஜை விழாவை முன்னிட்டு முதல் நாள் நிகழ்வாக பூர்வ ஆராதனை நிகழ்வு நடைபெற்றது.

அதனை முன்னிட்டுஇன்று ஸ்ரீ ஸ்ரீ கேசவ தீர்த்தர், ஸ்ரீ ராகவேந்திரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு துளசி, வண்ணநறுமலர்கள் , கஸ்துாரி மஞ்சளில் அர்ச்சனை செய்த பின் பல்வேறு தீப தூப உபசரிப்புகள் காண்பிக்கப்பட்டது.

 

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிகளை தரிசனம் செய்து சென்றனர். வருகை புரிந்த பக்தர்களுக்கு அன்னதான நிகழ்வு நடைபெற்றது.

What do you think?

பழமையான மாரியம்மன் கோவிலில் ஆடி முதல் நாளில் சிறப்பு அலங்காரம்

ஸ்ரீ பெரியகாண்டி அம்மன் ஆலயத்தில் அமாவாசை அபிஷேக ஆராதனை