அருள்மிகு சந்தியப்பன் ஆலய திருவிழா மாவிளக்கு பூஜை
நாமக்கல் கீழபேட்டபாளையத்தில் அருள்மிகு சந்தியப்பன் ஆலய திருவிழா மாவிளக்கு படைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்.
நாமக்கல் மாவட்டம்மோகனூர் ஒன்றியம் கீழப்பேட்டை பாளையம் மகா மாரியம்மன் ஆலயத்தின் திருவிழா நிறைவுற்று கடைசி நாள் ஒரு நாள் திருவிழா அதன் காவல் தெய்வமாக விளங்கும் அருள்மிகு சந்தியப்பன் ஆலயம் திருவிழா நேற்று இரவு நடைபெற்றது.
இந்த ஆலயத்தில் ஆனி திருவிழாவை முன்னிட்டு நேற்று இரவுசந்தியப்பனுக்கு பொங்கல் வைத்து பின்னர் ஊர் பொதுமக்கள் சார்பாக மாவிளக்கு படைக்கும் பூஜை செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
முன்னதாக ஊர் பொதுமக்கள் பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக பக்தர்கள் தலையில் மாவிளக்கினை சுமந்தவாறு திருக்கோவில் வந்தடைந்ததும் அருள்மிகுசந்தியப்பன் கோவில் முன் வரிசையாக மாவிளக்கு வைக்கப்பட்டு பூஜை நடைபெற்றது.
பின்னர் மாவிளக்கில் பக்தர்கள் தீபம் ஏற்றியும் தேங்காய் பழம் உடைத்தும் வழிபாடு செய்தனர் பின்னர் கோவில் பூசாரி அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயத்தில் உள்ள விநாயகர் மகா மாரியம்மன்க்கு மகா தீபாரனை காண்பிக்கப்பட்ட பின் அருள்மிகு சந்தியப்பனுக்கு மகா தீபாரணை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தனர்.

