in

நாமக்கல் ராசிபுரம் அண்ணாமலையார் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி விழா

நாமக்கல் ராசிபுரம் அண்ணாமலையார் ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி விழா

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கல்லாங்குளம் அண்ணாமலையார் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை ஒட்டி ஶ்ரீ அகோரமூர்த்தி பைரவருக்கு விசேஷ ஹோமங்கள் நடைபெற்றது.

பைரவருக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன.

தொடர்ந்து பைரவருக்கு புனுகு, கஸ்தூரி மஞ்சள் சாத்தபட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு எட்டு தீ பந்தங்களிடையே மயானத்தை பார்த்தவாறு சிரித்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகத்திலேயே மயானத்தை பார்த்து அருளும் பைரவர் ஸ்தலம் இதுவாகும்.

பூஜையில் சேந்தமங்கலம், இராசிபுரம், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பைரவரை தரிசனம் செய்தனர்.

அனைத்து பக்தர்களுக்கும் பைரவருக்கு பிடித்தமான தயிர் சாதம், புளியோதரை, சுண்டல் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் தலைமை அர்ச்சகர் சிவதிரு விஜயகுமார சுவாமிகள் செய்திருந்தார்.

What do you think?

அசலதீபேஸ்வரர் சிவாலயத்தில் ஆனிமாத தேய்பிறை அஷ்டமி

மானிய உரங்கள் கடத்தல் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு