in

கோவையில் புகைப்படக் கட்டணம் உயர்வு!

கோவையில் புகைப்படக் கட்டணம் உயர்வு!

 

கேமரா மற்றும் உபகரணங்கள் விலை உயர்வால், கோவையில் புகைப்படக் கட்டணத்தை உயர்த்தியுள்ளதாக புகைபப்ட உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் இனி பாஸ்போர்ட் புகைப்படம் ₹200 ரூபாய்க்கும் பிற போட்டோ வகைகளுக்கும் விலை உயர்வு செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

கோவை மாவட்ட ஸ்டுடியோ ஓனர்ஸ் அசோசியேஷன்–2012 சார்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், புகைப்படத் தொழில் எதிர்கொண்டு வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக சேவைக் கட்டணங்கள் மறுஆய்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

சங்க நிர்வாகிகள் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளில் கேமரா, லென்ஸ், கணினி, ஹார்ட்டிஸ்க், SSD, மெமரி கார்டு, ஆல்பம், பிரிண்டிங் பொருட்கள், பிரேம்கள், மின்சாரம், இணைய வசதி, வாடகை, ஊழியர் ஊதியம் உள்ளிட்ட தொழில்சார் செலவுகள் தொடர்ந்து அதிகரித்துள்ளன. மேலும், Adobe Creative Cloud, செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான மென்பொருட்கள், Cloud Storage உள்ளிட்ட டிஜிட்டல் சேவைகளுக்கான சந்தா கட்டணங்களும் செயல்பாட்டு செலவுகளை கணிசமாக உயர்த்தியுள்ளதாக தெரிவித்தனர்.

இந்தச் செலவின உயர்வால் பல சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஸ்டுடியோக்கள் தொழிலைத் தொடர்ந்து நடத்த முடியாமல் கடைகளை மூடி, மாற்றுத் தொழில்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

அண்டை மாநிலமான கேரளாவில் எட்டு பிரதிகள் கொண்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படத்திற்கான கட்டணம் ₹350 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், கோவையில் நீண்ட காலமாக சுமார் ₹180-க்கு வழங்கப்பட்டு வந்த சேவையை தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு ₹200 ஆக மட்டுமே உயர்த்தியுள்ளதாக சங்கம் தெரிவித்தது.

இந்தக் கட்டண உயர்வு அதிக லாபம் நோக்கியதல்ல; தரமான சேவையை தொடர்ந்து வழங்குவதற்கான குறைந்தபட்ச அவசியம் எனவும் விளக்கமளித்தனர்.

புகைப்பட ஸ்டுடியோக்கள் குடும்ப நினைவுகள், திருமணங்கள், கல்வி, வேலைவாய்ப்பு, அரசு ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய தருணங்களை பதிவு செய்து பாதுகாக்கும் நம்பகமான சேவை மையங்களாக இருப்பதால், பொதுமக்கள் தங்களது பகுதியிலுள்ள பதிவு செய்யப்பட்ட உள்ளூர் ஸ்டுடியோக்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்றும் சங்கம் வேண்டுகோள் விடுத்தது.

மேலும், சேவைக் கட்டண மறுஆய்வு அட்டவணை அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாகவும், அதை ஒருமித்த முறையில் நடைமுறைப்படுத்துமாறும் சங்கம் கேட்டுக் கொண்டது. புகைப்படத் தொழிலின் தரம், நம்பகத்தன்மை மற்றும் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்வதற்காக தொடர்ந்து செயல்படுவோம் என்றும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

What do you think?

மானிய உரங்கள் கடத்தல் குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு

கோவையில் மறைந்த நடிகர் பாக்யராஜ் வழியில், விழிகள் தானம்