in

ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவர் வழிபாடு

ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவர் வழிபாடு

 

நாமக்கல் அருள்மிகு காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கால பைரவரை வழிபாடு செய்த பக்தர்கள்.

நாமக்கல் நகர் தட்டார தெருவில் உள்ள அருள்மிகு ஏகாம்பர ஈஸ்வரர் காமாட்சி அம்மன் திருக்கோயில் ஆனி மாத தேய்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு இங்குள்ள கால பைரவருக்கு நேற்று இரவு பஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் மஞ்சள் சந்தனம் என பலவித வாசனை திரவியம் கொண்டு அபிஷேகமும் பின்னர் சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வில்வம் மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்யப்பட்ட பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கால பைரவருக்கு பூசணிக்காய் மற்றும் தேங்காய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

What do you think?

தாய் கண்டிப்பால் இளைஞர் விபரீத செயல்

அசலதீபேஸ்வரர் சிவாலயத்தில் ஆனிமாத தேய்பிறை அஷ்டமி