in

சித்திரை வசந்த உற்சவ விழாவின் நிறைவாக அண்ணாமலையார் கோவில் மன்மத தகனம்


Watch – YouTube Click

 

சித்திரை வசந்த உற்சவ விழாவின் நிறைவாக அண்ணாமலையார் கோவில் மன்மத தகனம்

 

சித்திரை வசந்த உற்சவ விழாவின் நிறைவாக அண்ணாமலையார் திருக்கோவில் மன்மத தகனம் வெகு விமர்சியாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்…

நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவ விழா, ஆனி மாதத்தில் ஆனி பிரம்மோற்சவம், ஆடி மாதத்தில் ஆடி பிரம்மோற்சவம், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருவிழா, கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, தை மாதத்தில் உத்தராயண புண்ணிய காலம் என ஆண்டுதோறும் பல்வேறு பிரம்மோற்சவங்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும்.

அதன்படி கடந்த 14-ஆம் தேதி சித்திரை வசந்த உற்சவ விழா அண்ணாமலையார் திருக்கோவிலில் தொடங்கி இரவு நேரங்களில் அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் மகிழ மரத்தை 10 முறை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

அப்பொழுது மகிழ மரத்தை வலம் வந்த அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு பாவை வடிவிலான பொம்மை பூ கொட்டும் நிகழ்வு கடந்த 10 தினங்களாக வெகு விமர்சியாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து 10-ம் நாளான இன்று (23.04.2024)அதிகாலை திருக்கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பின்னர் மாடவீதிகளில் வலம் வந்து ஐயங்குளத்தில் சித்திரை மாதம்,  சித்திரை நட்சத்திரத்தில் சூலத்திற்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களை கொண்டு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க குளத்தில் தீர்த்தவாரி வெகு விமர்சியாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து திருக்கோவிலுக்குள் வந்த அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மன் தங்கக் கொடிமரம் அருகே உள்ள சபா மண்டபத்தில் எழுந்தருளியதை தொடர்ந்து அண்ணாமலையார் ஆழ்ந்த தியானத்தில் சென்றுவிட்டார். அப்போது உலகம் முழுக்க உள்ள அனைத்து ஜீவராசிகளும் சிருஷ்டி அடையும் விதமாக மன்மதன் அண்ணாமலையார் மீது பானம் தொடுத்த நேரத்தில் அண்ணாமலையார் தியானம் கலைந்து எதிரே இருந்த மன்மதனை தீப்பிழம்பால் சுட்டு அழித்தார். இந்த நிகழ்வையே மன்மத தகனம் என்று அழைப்பர்.

மன்மதனை தகனம் செய்த பிறகு அண்ணாமலையார் திருக்கோவிலில் வானவேடிக்கை நடைபெற்றது. தொடர்ந்து அண்ணாமலையார் உண்ணாமலை அம்மன் பக்தர்களுக்கு வலம் வந்து காட்சியளித்தனர்.

இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Watch – YouTube Click

What do you think?

போக்குவரத்து கழக ஊழியர் மனவிரக்தியால் உயிரிழந்தார்

இந்திய பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள் ஐரோப்பிய ஒன்றியம் ஷாக்