in

தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் கடலூரில் ஆவேச பேச்சு


Watch – YouTube Click

தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் கடலூரில் ஆவேச பேச்சு

 

கடலூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் திரு சிவக்கொழுந்து அவர்களை முரசு சின்னத்தில் கடலூர் மக்கள் ஆதரவு கொடுத்தால் கடலூர் வாழ் மக்களின் நீண்டகால பிரச்சனையான கடலூர் டு புதுவை மேம்பாலம் மற்றும் பணிகள் கடல் வழி போக்குவரத்தும் சிப்காட் கழிவுகளால் மாசுபடும் பகுதிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் பிரேமலதா அவர்கள் கடலூரில் ஆவேச பேச்சு.

கடலூரில் இன்று மஞ்சக்குப்பம் டாக்ஸ் அண்ட் அருகே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் உள்ள கடலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் திரு சிவக்கொழுந்து அவர்களுக்குஆதரவாக தேமுதிக நிறுவனர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள்முரசு சின்னத்தில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார் பின்னர்பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசுகையில்

கடலூரில் நடைபெறும் பல்வேறு பிரச்சனைகளை சுட்டிக்காட்டி பேசினார் சமீபத்தில் கந்தசாமி நாயுடு கல்லூரியில் வரி பாக்கிக்காக முதல்வர் அறையை சீல் வைத்தது மற்றும் திமுகவில் உள்ள மாநகராட்சி மேயருக்கு பதிலாக அவரது கணவர் தான் நிர்வாகத்தினை நடத்துவதாகவும் குற்றம் சாட்டினார் மேலும் கடலூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க விதத்தில் சிவக்கொழுந்து அவர்களுக்கு ஆதரவு அளிப்பதும் வாயிலாக நிச்சயமாக கடலூர் டு புதுச்சேரிக்கு மேம்பால பணிகள் நிச்சயமாக நிறைவேற்றப்படும் என்றும் கூறினார்.

அது மட்டுமல்லாமல் நாகப்பட்டினம் கடற்கரைபொதுமக்கள் பயன்பாட்டுக்கும் அதே போல கடலூரில் சிப்காட் பகுதியில் ஏற்படும் மாசுகளை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கேப்டன்விஜயகாந்த் மறைவில் பெண்களை விட ஆண்கள் அதிகம் பேர் கண்ணீர் விட்டு அழதனர் என்றும் இதற்காக நான் அனைவரிடம் வேண்டுவது எல்லாம் கேப்டனின்நினைவுகளை போற்றும் வகையில் நிச்சயமாக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் சிவக்கிழங்கு அவர்களை ஒன்னாம் நம்பர் பட்டனில் வாக்குகளை செலுத்தி உங்கள் பொன்னான வாக்குகளை முரசு சின்னத்திற்கு அளிக்க வேண்டும் என்றும் கைகூப்பி வேண்டி கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுக அமைச்சர் திரு சம்பத் அவர்களும்மற்றும் கழக செயற்குழு உறுப்பினரும் மகளிர் அணி செயலாளருமான சாந்தி அவர்களும் சேவல் குமார் அவர்களும் சி கே கார்த்திகேயன் ராஜாராம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

நமச்சிவாயம் வெற்றி பெற 108 பூசணிக்காயை கற்பூரம் ஏற்றி திருஷ்டி கழித்து பூஜை செய்த பொதுமக்கள்

காலி சேர்கள் மத்தியில் உரையற்றினார் ஜே.பி. நாட்டா