in

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நெல்லை மாவட்டத்தில் 226 மையங்கள் அமைப்பு


Watch – YouTube Click

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நெல்லை மாவட்டத்தில் 226 மையங்கள் அமைப்பு

 

என்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நெல்லை மாவட்டத்தில் 226 மையங்கள் அமைக்கப்பட்டு 57 ஆயிரத்து 787 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் இன்றைய தினம் நடைபெறுகிறது. கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் ,தட்டச்சர் என 6444 பணியிடங்களுக்கு நடைபெறும் இந்த தேர்வில் நெல்லை மாவட்டத்தில் 57,787 பேர் தேர்வு எழுதுகின்றனர். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்காக நெல்லை மாவட்டத்தில் 226 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

சரியாக காலை 9:30 மணிக்கு தேர்வு தொடங்க உள்ள நிலையில் காலை 9 மணிக்குள் தேர்வு மையத்திற்குள் அனைவரும் இருக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்ட சூழலில் சரியாக 9:00 மணிக்கு மையங்களின் கதவுகள் பூட்டப்பட்டது தொடர்ந்து தேர்வு அறைகளில் மாணவர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டு தேர்வு நடைபெறும்.

மையம் முழுவதும் சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் கேமரா ஒளிப்பதிவின் மூலம் கண்காணிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரியில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல்

நெல்லையப்பர் திருக்கோவில் தேர்களை தீயணைப்புத் துறையினர் தண்ணீர் பீச்சி அடித்து சுத்தம் செய்தனர்