in

பறை அடித்தபடி நடந்து சென்று வாக்கு சேகரிப்பு


Watch – YouTube Click

நாகையில் பறை அடித்தபடி நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா;

நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கார்த்திகா போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அதிமுக, பாஜக என 4 முனை போட்டி நிலவுவதால் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரீப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா இன்று கீழ்வேளூர் சுற்று வட்டார பகுதிகளான நீலப்பாடி, குருக்கத்தி, கூத்தூர், கானூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரப்பில் ஈடுப்பட்டார். கீழ்வேளூர் கடைத் தெருவில் வாக்கு சேகரிக்க வந்தவருக்கு பறை இசையோடு கட்சியினர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து வேட்பாளர் கார்த்திகா பறை அடித்தபடி நடந்து சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார். தொடர்ந்து ஜவுளி கடை, சூப்பர் மார்க்கெட், மெடிக்கல் ஷாப், காய்கறி கடைகளில் உள்ளிட்ட கடை மற்றும் வணிக நிறுவனங்களில் வேலைப்பார்க்கும் பெண்கள் மற்றும் பொது மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி தனக்கு மைக் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.


Watch – YouTube Click

What do you think?

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றிய 2-ஆம் கட்ட பகுப்பாய்வு நடைபெற்றது

நெருங்கும் பாராளுமன்றத் தேர்தல் நொறுங்கும் பாஜகவின் திட்டங்கள்