in

தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் பாஜக வேட்பாளர்கள்


Watch – YouTube Click

திருவாரூரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் பாஜக வேட்பாளர்கள்

வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக நாகை நாடாளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் அதன் வேட்பாளராக இந்திய கம்யூனிஸ்டு நாகை தொகுதி வை செல்வராஜ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்று திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் வேட்பாளர் செல்வராஜை ஆதரித்து திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் திறந்த வெளி வாகனத்தில் பொதுமக்களை சந்தித்து தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும் விளமல் நெய்விளக்கு தோப்பு, தென்றல் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் போகும் இடமெல்லாம் பெண்கள் பூரண கும்பம் மரியாதை செலுத்தி பொன்னாடை போற்றி வேட்பாளரை வரவேற்றனர் மேலும் நூற்றுக்கு மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் 300-க்கும் மேற்பட்டோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் திருவாரூர் மாவட்டம் விவசாயம் சார்ந்த பகுதி விவசாயிகள் நலம் பெற விவசாய தொழிற்சார்ந்த தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதேபோல வேளாண் கடன்களை தள்ளுபடி செய்வோம் எனவும் வேட்பாளர் தெரிவித்தார்.

மேலும் அதே போல் பாரதிய ஜனதா கட்சியின் நாகப்பட்டினம் நாடாளுமன்ற வேட்பாளர் ரமேஷ் பழைய பேருந்து நிலையத்தில் தீவிர வாக்கு சேகரிப்பு ஈடுபட்டார். உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் உணவு உண்ணும் நபர்களிடம் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களித்து மீண்டும் மோடியை பிரதமராக வேண்டும் என கேட்டுக் கொண்டு வாக்குகளை சேகரித்தார் தலையில் தொப்பியோடு திருவாரூர் நகரத்துக்குட்பட்ட பல்வேறு இடங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.


Watch – YouTube Click

What do you think?

மு.க ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ஆட்சியின் சாதனைகள் குறித்து விவாதிக்க தயார்…

நூறு ரூபாய் குறைக்காத ஸ்டாலின் 500 ரூபாய் குறைப்பாரா?