in

குற்றவாளி தங்களிடம் ஒப்படைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்


Watch – YouTube Click

குற்றவாளி தங்களிடம் ஒப்படைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

 

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதிக்குட்பட்ட சோலை நகர் பாடசாலை வீதியை சேர்ந்தவர் நாராயணன்-மைதிலி தம்பதியர் இவர்களது ஒன்பது வயது மகள் ஆர்த்தி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த சனிக்கிழமை மதியம் வீட்டு அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போனார். மாலை வரை தேடிய பெற்றோர் இது குறித்து முத்தியால்பேட்டை போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

போலீசார் அங்குள்ள சிசிடி காட்சிகளை பார்த்தபோது சிறுமி வீட்டு சாலை வரை நடந்து வருவது அனைத்து சிசிடிவி பதிவாகியுள்ளது.

அதன் பிறகு மாணவி மாயமாகிவிட்டார். இதனால் சோலை நகர் பகுதியில் தான் சிறுமியை யாராவது கடத்திருக்க வேண்டும் என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தினார்கள்.

மேலும் அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் சோதனையிட்டனர். வீட்டில் உள்ள கழிவு நீர் தொட்டி, பீரோ பிரிட்ஜ் என அனைத்தையும் சோதனை இத்தனர்.
300க்கும் மேற்பட்டோரிடம் விசாரணையும் 150 க்கு மேற்பட்ட சிசிடி காட்சிகளும் 50-க்கும் மேற்பட்ட வாகனங்களையும் சோதனையிட்டனர்.

இருப்பினும் சிறுமி தொடர்பாக எந்த ஒரு துப்பும் கிடைக்கவில்லை.
இந்த வழக்கில் போலீசால் திணறிய நிலையில் இன்று மதியம் 2 மணி அளவில் அதே பகுதியில் அம்பேத்கர் நகர் வாய்க்காலில் ஒரு பிணமூட்டை இருப்பதை பொதுமக்கள் கண்டறிந்து போலீசாருக்கு தெரிவித்தனர்.

இதனையடுத்து போலீசார் அங்கு வந்து பார்த்தபோது அது சிறுமி ஆர்த்தி என்பது தெரிய வந்தது. இத்தகவல் அறிந்து சோலை நகரை சேர்ந்த பொதுமக்களும் சிறுமியின் பெற்றோரும் உறவினர்களும் அங்கு கூடினர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூறியதால் அப்பகுதி பதற்றமானது. போலீசார் துரிதமாக செயல்படவில்லை என்ற குற்றம் சாட்டி அப்பகுதி மக்கள் பிணத்தை எடுத்து செல்ல தடுத்தனர்.

இதனால் கூடுதல் போலீஸ் குவிக்கப்பட்டு ஆம்புலன்ஸில் சிறுமியின் உடல் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்டது. இருப்பினும் அப்பகுதி மக்கள் ஆம்புலன்ஸ் தட்டியும் வழிமறித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இருப்பினும் போலீசார் ஆம்புலன்ஸை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.

அதே வேளையில் பொதுமக்கள் அங்கிருந்து நடந்தே வந்து புதுச்சேரி- மரக்காணம் சாலையில் முத்தியால்பேட்டை மணி கூண்டு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் அலட்சியத்தை கண்டித்தும் குற்றவாளிகளை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனும் கூறி அவர்கள் மறியலில் ஈடுபட்டனர். மாலை 3 மணி முதல் 5 மணி வரை போராட்டம் தொடர்ந்தது. இதனிடையே உள்ளூர் போலீசாரால்
மக்களை சமாளிக்க முடியாத தேர்தல் பணிக்காக வந்த துணை ராணுவப்படையினரை வரவழைக்கப்பட்டனர்.

அவர்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
பொதுமக்களை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இருப்பினும் ஊர் பிரமுகர்கள் பொதுமக்களை சமாதானப்படுத்தி சாலையின் ஒருபுறமாக நிறுத்த போக்குவரத்து பாதி அளவில் சீரானது.

இதனிடையே சிறுமி கொல்லப்பட்ட விவகாரத்தில் அதே பகுதியை சேர்ந்த கருணாஸ் உட்பட ஐந்து பேரை போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இவ்வழக்கில் பிரேத பரிசோதனைக்கு பிறகு தான் சிறுமிக்கு ஏற்பட்டுள்ள கொடுமை குறித்து தெரியவரும். குற்றவாளிகளை கைது செய்யும் வரை பிணத்தை வாங்க மாட்டோம் என பெற்றோரும் உறவினர்களும் ஊர் மக்களும் தெரிவித்துள்ளதால் இவ்வழக்கு மேலும் பதட்டமான சூழல் நீடிக்கிறது.


Watch – YouTube Click

What do you think?

BJP மம்தா உருவ பொம்மை எரிக்க முயற்சி

சட்ட மன்றதுக்கு பூட்டு பஞ்சாப் முதல்வர் கிண்டல்