in

பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்


Watch – YouTube Click

பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்

பாஜக மீண்டும் ஆடசிக்கு வந்தால் ஒற்றுமையாக வாழும் இந்தியாவில் வெறுப்பு விதைகளை தூவி நாசம் செய்துவிடுவார்கள் என்னும் வெள்ள நிவாரணத்திற்கு நிதி தராத நிலையில் நீதி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க உள்ளோம், பாரதிய ஜனதா அதிமுக ஆகிய இருவரையும் ஒருசேர வீழ்த்துங்கள் என நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் திருநெல்வேலி கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இந்தியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்கள் ராபர்ட்புரூஷ் , விஜய்வசந்த் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வேட்பாளர் தாரகைகுட்பெட் ஆகியோரை ஆதரித்து திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் அப்போது அவர் பேசியதாவது

தமிழகத்தை மதிக்கும், தமிழர்களை மதிக்கும் ஒருவர் பிரதமராக வேண்டும். அது மக்களாகிய உங்கள கைகளில் தான் உள்ளது.இந்த தேர்தலில்
மோடி தோற்கடிக்கப்பட வேண்டும்.மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறிவிடும்.அதற்கு தற்போதைய உதாரணம்மணிப்பூர் மக்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்கிறார்கள் பாஜக ஆட்சிக்கு மீண்டும் வந்தால் ஒற்றுமையாக வாழும் இந்தியாவில், மக்கள் இடையே பிரிவினை ஏற்படுத்தும் வகையில் வெறுப்பு விதைகளை தூவி நாசம் செய்துவிடுவார்கள்.தேர்தல் அறிவித்ததும்
அடிக்கடி தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி வெள்ளம் வந்தப்போது எங்கிருந்தீர்கள். என கேள்வி எழுப்பிய ஸ்டாலின் தொடர்ந்து பேசுகையில்
2 இயற்கை பேரிடர்கள் அடுத்தடுத்து தமிழகத்தின் வட தென்மாவட்டங்களை தாக்கிய நிலையில் ஒரு பைசா கூட வெள்ள நிவாரணமாக தமிழகத்திற்கு தரவில்லை.மத்திய அரசிடம் இருந்து நிதி வராத நிலையிலும் கூட மக்களுக்காக உதவி செய்தோம். அனைத்து அமைச்சர்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உடனடியாக அனுப்பி வைத்தோம்.

நிதிதான் தரவில்லை ஆறுதல் வார்த்தையாவது தமிழகத்திற்கு வந்த போது பிரதமர் மக்களுக்கு சொல்லவில்லை நோய் தொற்று ஏற்படாமல் மக்களை காக்க 2500 க்கு மேற்பட்ட மருத்துவ முகாம்கள் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடத்தப்பட்டது.

தமிழகத்தின் மொத்த அமைச்சர்களும் பாதிக்கப்பட்ட பகுதிக்கு அனுப்பிவைக்கப்பட்டு மக்களோடு மக்களாக இருந்து அவர்கள் துயர் துடைத்தனர்.
வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய நிவாரணத் தொகையை 37000 கோடியை தொடர்ந்து கேட்டும் தர மறுத்துவிட்டனர்.

வெள்ள பாதிப்புகளுக்கு நிதி ஒதுக்காத மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போகிறோம்.கவர்னருக்கு பல முறை மூக்கறுப்பு நடந்த போதிலும் வெட்கம் மானம் இல்லாமல் பதவியில் தொடர்ந்து இருந்து வருகிறார்.
நிதி தராமல் எத்தனை ஓரவஞ்சனையோடு மத்திய அரசு உள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் நிதியும் தராமல் மாநில அரசு தரும் நிதியை பிச்சை என்கிறார்கள். மக்களை பிச்சைக்காரர்கள் என அழைக்கிறார்
அரசு, மக்களுக்கு செலவு செய்யும் பணம் அனைத்தும் மக்களுக்குறியது ஆகையால் மக்களுக்கு செலவு செய்கிறோம்.

பணத்தை பெறுவதற்கான முழு உரிமையும் மக்களுக்கு உள்ளது.
இந்த தேர்தலில் பாஜகவின் தோல்வி உறுதியாகிவிட்டது.ஒன்றிய நிதி அமைச்சர் அவர்களே எப்போதாவது மக்களை நேரடியாக சந்தித்து இருக்கிறீர்களா ?மக்களை ஒருமுறை சந்தித்து பாருங்கள் பிச்சை என்ற வார்த்தை இனி மனதிலேயே வராது

மத்திய நிதி அமைச்சர் தமிழக மக்களை பிச்சைகாரர் என்கிறார்.இன்னொரு மத்திய அமைச்சர் தமிழக மக்களை தீவிரவாதி என சொல்கிறார்.
வெறுப்பு வன்மத்தை பரப்பும் அமைச்சர்களாக மத்திய அமைச்சர்கள் உள்ளனர்.
பாஜகவுக்கு வாக்களிப்பது அவமானம் என அனைவரிடமும் எடுத்துரைக்க வேண்டும்.

பாஜகவுக்கு வாக்களிப்பது எதிர்கால சந்ததிக்கு செய்யும் துரோகம்
தேர்தலுக்காக தமிழகம் வரும் பிரதமர் அவர்களே தமிழகத்திற்கு என எந்த சிறப்பு திட்டத்தை நீங்கள் கொண்டுவந்தீர்கள்.10 ஆண்டுகளில் என்ன சாதித்தீர்கள். தமிழக மக்கள் கொடுக்கும் ஒரு ரூபாய் வரிக்கு 29 பைசா திருப்பிகொடுக்கிறீர்களே அதற்காவது பதில் சொவீர்களா அல்லது அதற்கும் வாயால் வடை சுடுவீங்களா?

மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது 69 சிறப்பான திட்டங்கள் கொண்டுவரப்பட்டது.11% சிறப்பு நிதி பெற்று கொடுக்கப்பட்டது.
தமிழை செம்மொழியாக்க வேண்டும் என இருந்த மக்களின் கனவை நினைவக்கியது முன்னாள் முதல்வர் கலைஞர்.

420 கோடி செலவில் ஒரகடத்தில் தேசிய மோட்டார் ஆராய்ச்சி மையம். தாம்பரத்தில் தேசிய சித்த ஆய்வு மையம் சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம். 2407 கோடி செலவில் சேது சமுத்திர திட்டம். அடக்கு முறை பொடா சட்டம் ரத்து.மீட்டர் கேஜ் ரயில் பாதை அகல ரயில் பாதையாக்க அனுமதி சென்னை மெட்ரோ திட்டம் திருச்சி கோவை விமான நிலைய விரிவாக்கம். திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் கிண்டி கத்திபாரா கோயம்பேடு மேம்பாலம்
உள்ளிட்ட பல திட்டங்கள் திமுக மத்திய அரசு கூட்டணியில் இருக்கும் போது கொண்டுவந்த திட்டங்களாக உள்ளது என திட்டங்களைப் பட்டியலிட்டார்

தமிழகத்தை தமிழக மக்களையும் வெறுத்த மோடி போன்ற பிரதமர் இந்திய வரலாற்றில் இதுவரை இருந்தது கிடையாது. மதுரையில் ஏய்ம்ஸ் அமைக்கப்படும் என அறிவித்து 10 ஆண்டுகள் கடந்து விட்டது அதே மதுரையில் திராவிட மாடல் அரசு நூலகம்,ஜல்லிகட்டு அரங்கம் ஆகியவை அறிவித்து 3 ஆண்டுகளில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.பிரதமர் மோடி அபத்தமான குற்றச்சாட்டை கன்னியாகுமரி பொதுக் கூட்டத்தில் சொல்லியுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக 3000 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைதானது பாஜக ஆட்சியில் தான். 56 இஞ்ச் மார்பு என இருமாப்புடன் சொல்லும் பிரதமர் தமிழக மீனவர்களை கைதை கண்டிக்க ஏன் தைரியமில்லை இலங்கையை கண்டு பிரதமர் பயப்படுகிறார் 10 ஆண்டு காலத்தில் பிரதமர் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை என்பதற்கு அவரே இதன் மூலம் ஒப்புதல் அளிக்கிறார் 2014-2024 ஆகிய 10 ஆண்டுகளில் தான் மீனவர் மீதான தாக்குதல் தான் தமிழக வரலாற்றிலேயே அதிகம்.

நேருவை திட்டுவது,சோனியாவை வசைபாடுவது, ராகுல்காந்தியை கண்டு பயப்படாமல் இருப்பது எப்படி என பிரதமர் தினசரி வேலையாக நினைத்து திட்டமிட்டு கொண்டிருக்கிறார்.

ஜனநாயகம் மதச்சார்பின்மை, சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவையை பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அழிந்துவிடும்.எதனையும் கவலைப்படாமல் வளைந்த முதுகோடு பாதம் தாங்கி எடப்பாடி பழனிச்சாமி வலம் வந்து கொண்டிருக்கிறார்.
பிரதமர் பற்றியும் பாஜகவை பற்றியும் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஒருவார்த்தை கூட பேசவில்லை பேசுவதற்கும் துப்பில்லை.

பாஜகவின் எதிரான வாக்குகளை பிரிக்ககவேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர்களை களம் இறக்கியுள்ளார். இதுதான் கள்ளக் கூட்டணி ஆகும்
எடப்பாடி பழனிச்சாமி மட்டுமில்லை அதிமுக தொண்டர்கள் மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டனர்

குடியுரிமை சட்டத்திருத்தற்கு எதிராக வாக்களித்ததை கண்டித்து கையெழுத்து இயக்கத்தை நடத்திய போது திமுகவை பார்த்து எந்த முஸ்லீம் பாதிக்கப்பட்டார்கள் என பாஜகவின் டப்பிங் வாய்ஸ் எடப்பாடி பழனிசாமி பேசினார். ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் என சபதம் எடுத்துள்ள எடப்பாடி பழனிச்சாமி ஒற்றை விரலால் தமிழக மக்களின் கண்களை குத்தியுள்ளார். அவர் எடுத்தது சபதம் அல்ல வெறும் வாய் சவடால் சர்வாதிகார ஆட்சியாளர்களை தலைதூக்க விடலாமா? எப்படிபட்ட அடிமைதனத்தில் இருந்து நாம் மீண்டோம் என்பதை மறக்க கூடாது. தமிழகத்தில் முதல்வரான போது கொண்டுவந்த திட்டங்களை இந்தியாவின் பல மாநிலங்கள் பின்பற்றி வருகிறது.

நெல்லையை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை பட்டியலிட்ட அவர்
பாஜகவிற்கு அளிக்கும் வாக்கு தமிழகத்திற்கு வைக்கும் வேட்டு.
பாஜக அதிமுக ஆகியோரை ஒரு சேர வீழ்த்துங்கள் என கூறினார் .
முன்னதாக திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த் விளவன்கோடு சட்டப்பேரவை இடைத்தேர்தல் வேட்பாளர் தாரகை குர்த்பட் ஆகியோர் கை சின்னத்திற்கு வாக்குகேட்டு உரையாற்றினர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ். ஆர்.ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, மனோதங்கராஜ், சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர்அல்போன்ஸ், நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.தைதீன்கான், நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், சட்டமன்ற உறுப்பினர்கள் அப்துல்வகாப், பிரின்ஸ், ரூபிமனோகரன், உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்


Watch – YouTube Click

What do you think?

நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருக்கு பிரச்சாரம் செய்த அமைச்சர் நேரு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் பேசியது