நெல்லை முக்கூடல் முத்துமாலை அம்மன் கோவிலில் ஆனித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்
நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி நதிக்கரைகள் அமைந்திருக்கும் பிரசித்தி பெற்ற முத்துமாலை அம்மன் திருக்கோவில் ஆனித் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாகவும் இத்திருவிழா 11 நாட்கள் நடைபெறும்.
இத்திருவிழாவில் தொடக்க நிகழ்ச்சியான கொடியேற்றம் இன்றைய தினம் கோலாகலமாக நடைபெற்றது இதனை ஒட்டி அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் யாக கேள்விகள் நடைபெற்றது
தொடர்ந்து தாமிரபரணி நதிக்கரையிலிருந்து தீர்த்தம் எடுக்கும் நிகழ்ச்சியும் அதனை தொடர்ந்து யானை மீது கொடிபட்டம் மற்றும் நகைப்பெட்டி எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தொடர்ந்து மேளதாளம் முழங்க தாமிரபரணி நதிக்கரையில் அமைந்திருக்கும் முத்துமாலை அம்மன் கோவிலுக்கு யானை மீது எடுத்துவரப்பட்ட கொடிபட்டம் வந்தடைந்ததும் கோவில் கொடிமரத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
பின்னர் கொடி மரத்திற்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடத்தப்பட்டது இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

