in

ஸ்ரீ காந்தாரி அம்மன் ஆலய கும்பாபிஷேக சிறப்பு யாகசாலை பூஜை

ஸ்ரீ காந்தாரி அம்மன் ஆலய கும்பாபிஷேக சிறப்பு யாகசாலை பூஜை

 

இரண்டாவது நாளாக சிறப்பு யாகசாலை பூஜை – ஸ்ரீ காந்தாரி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் சிறப்பு ஆராதனைகள்

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வவிநாயகர், அருள்தரும் ஸ்ரீ காந்தாரி அம்மன் ஆலயத்தில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்று வருகிறது.

28 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இரண்டாவது நாளாக யாகசாலை பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன.

மங்கள இசை, வேத பாராயணத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில் சிறப்பு யாகங்கள், மூல மந்திர ஹோமம், பூர்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.

தொடர்ந்து ஸ்ரீ காந்தாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு ஆராதனை மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றன. யாகசாலையில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

முன்னதாக தாமிரபரணி ஆற்றில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் குடங்களில் புனித நீர் எடுத்து வந்து, மஞ்சள் கலந்து தாமிரபரணி தீர்த்தத்தால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

விழாவின் நிறைவு நிகழ்வாக நாளை காலை 9 மணிக்கு ஸ்ரீ காந்தாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ள நிலையில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

What do you think?

உலக குருதி கொடை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

மது போதையில் பள்ளி வேன் ஓட்டியதாக குற்றச்சாட்டு