in

சிதம்பரம் நடராஜர் கோவில் தெருவடைச்சான் தேரோட்ட விழா

சிதம்பரம் நடராஜர் கோவில் தெருவடைச்சான் தேரோட்ட விழா

 

உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் தெருவடைச்சான் தேரோட்ட விழா வெகு விமர்சையாக விமர்சையாக நடைபெற்றது, நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்.

பஞ்சபூத தலங்களில் ஆகாயத்தலமாக போற்றப்படும் உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன திருவிழா கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது திருவிழாவின் ஐந்தாம் நாள் நிகழ்வாக பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளும் தெருவடைச்சான் தேரோட்ட விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

பஞ்ச மூர்த்திகள் இரவு 12 மணிக்கு நடையிலிருந்து புறப்பட்டு நான்கு மாட வீதிகளையும் உலா வந்து காலையில் 4 மணியளவில் நிலையை வந்து அடைந்தது.

இதில் திரளான பொதுமக்கள்,பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டு சிவ வாத்தியங்கள் முழங்க நமச்சிவாய என்று கோஷம் எழுப்பி பஞ்ச மூர்த்திகளை வழிபட்டனர்.

What do you think?

ஆனி மாத ஜோதி தரிசனம்

தூத்துக்குடியில் போலீசாரை தாக்கிய 3 பேருக்கு வலை