தூத்துக்குடியில் போலீசாரை தாக்கிய 3 பேருக்கு வலை
தூத்துக்குடி வீட்டின் மீது மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில் குண்டு வீசிய குற்றவாளிகளை கைது செய்ய சென்றபோது காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் காவலர் மீனாட்சி ஆகியோரை அறிவாளாள் தாக்கி விட்டு தப்பி ஓடிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை தூத்துக்குடியில் குற்றவாளிகளை கைது செய்ய முயன்ற போது காவல் உதவிஅய்வாளருக்கு அரிவாள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி நேருகாலனி பகுதியில் சேர்ந்த மாரிசெல்வம் என்ற இளைஞர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்தில் அதே நேரு காலனி பகுதியைச் சேர்ந்த ஹரிஹரசுதன் என்பவர் குற்றவாளியாக காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
இந்த நிலையில் இறந்த மாரி செல்வத்தின் நண்பர்கள் ஆன நண்டு என்ற கார்த்திக் மற்றும் விக்னேஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரும் நேற்று முன்தினம் இரவு நேரு காலணியை சேர்ந்த ஹரிஹரசுதன் வீட்டின் முன்பு இரண்டு மண்ணெண்ணெய் பாட்டில் நிரப்பிய பாட்டில் குண்டை வீசி விட்டு சென்றுள்ளனர் இதில் ஹரிஹரசுதனின் வீட்டு கூரை முன்பு லேசாக தீப்பிடித்து உள்ளது தீயை வீட்டில் இருந்தவர்கள் அணைத்து உள்ளனர் இந்த மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு சம்பவம் தொடர்பாக தாளமுத்துநகர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து தாளமுத்து நகர் காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் மற்றும் காவலர் மீனாட்சி உள்ளிட்ட காவல்துறையினர் குற்றவாளிகளான நண்டு என்ற கார்த்திக் விக்னேஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் தூத்துக்குடி அம்பேத்கார் நகர் அருகே உள்ள சுந்தரவேல் புரம் கல்லறைத் தோட்ட காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது தொடர்ந்து அங்கே அவர்களை கைது செய்ய சென்றனர்.
அப்போது அங்கே பதுங்கி இருந்த கார்த்திக் மற்றும் மற்றும் விக்னேஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த அறிவாளால் காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா மற்றும் காவலர் மீனாட்சி ஆகியோரை மிரட்டியதுடன் அவர்களை அறிவாளாள் தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றுள்ளனர்.
இதை தொடர்ந்து போராடி காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா மற்றும் காவலர் மீனாட்சி ஆகியோர் கார்த்திக் விக்னேஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.

இதில் காவல் துறையினர் பிடிக்கும்போது தப்ப முயன்ற கார்த்திக்குக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது மற்றும் சிறுவனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வருகிறது மேலும் விக்னேஷ் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜ் அளித்த புகாரின் பேரில் கார்த்திக் விக்னேஷ் உள்ளிட்ட மூன்று பேர் மீது வட பாகம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடியில் வழக்கு தொடர்பாக கைது செய்ய வந்த காவல்துறை உதவி ஆய்வாளர் மற்றும் காவலரை அறிவாளாள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


