in

தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் மினி மாரத்தான் போட்டி

தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் மினி மாரத்தான் போட்டி

 

கல்வி உரிமை, கல்வி முறைகேடுகள், கல்வி அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் மினி மாரத்தான் போட்டி; இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு.

தூத்துக்குடி மாநகர் காங்கிரஸ் கட்சி சார்பில், கல்வி உரிமை முறைகேடுகள், சமத்துவம் மற்றும் வினாத்தாள் கசிவு மற்றும் நாட்டு மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கும் பிஜேபி அரசை கண்டித்தும் மற்றும் காமராஜர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாணவ, மாணவியருக்கான மினி மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை தூத்துக்குடி மாநகர் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சாகாயராஜ் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும் முன்னாள் எம்பியுமான செல்லக்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதில் 14 வயதுக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த மினி மாரத்தான் ஓட்டப்பந்தயம் தூத்துக்குடி பனிமய மாதா கோவில் முன்பு இருந்து துவங்கி, கிழக்கு கடற்கரை சாலை வழியாக ரயில்வே கேட் வரை சென்று அங்கிருந்து திரும்பவும், மீண்டும் மாதா கோவில் முன்பு மாரத்தான் போட்டி நிறைவடைந்ததையடுத்து, வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள், மற்றும் பொதுமக்களுக்கு முதல் பரிசு 25 ஆயிரம், இரண்டாம் பரிசு 20 ஆயிரம், மூன்றாம் பரிசு 15 ஆயிரம், நான்காம் பரிசு 10 ஆயிரம், ஐந்தாம் பரிசு 5 ஆயிரம் மற்றும் போட்டியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ – மாணவிகளுக்கும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.

What do you think?

கண்களில் கருப்பு ரிப்பன் கட்டிக்கொண்டு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

நடிகர் ஸ்ரீமன் அண்ணாமலையார் கோவில் சாமி தரிசனம்