in

 உப்பளங்களை காப்பாற்ற வலியுறுத்தி முற்றுகை

 உப்பளங்களை காப்பாற்ற வலியுறுத்தி முற்றுகை

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு, கோவளம், கோவங்காடு, புல்லாவெளி உள்ளிட்ட பகுதிகளில் கோவளம் பசுவந்தரை தன்பாடு சிறிய உப்பு உற்பத்தியாளர் சங்கம் சார்பில் சுமார் 300-க்கும் மேற்பட்ட உப்பு உற்பத்தியாளர்கள் சிறிய அளவில் உப்பு உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தொழிலை நம்பி சுமார் 20,000 மேற்பட்ட ஆண் பெண் தொழிலாளர்கள் உள்ளனர் இந்த நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து அந்த இடங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் உப்பு உற்பத்தி செய்யப்படும் .

இடத்தில் பன்னாட்டு நிறுவனம் சார்பில் கப்பல் கட்டு தளம் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது இதை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும் உப்பு தொழிலை அழித்துவிட்டு கப்பல் கட்டும் தளம் வைக்கக்கூடாது என வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் உப்பள தொழிலாளர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் நேற்றைய தினம் உப்பளத்தில் வேலையில் இருந்து ஒப்பளத் தொழிலாளர்களை அங்கு சென்ற விஏஓ கடுமையாக மிரட்டியுள்ளார் தொடர்ந்து உப்பளத் தொழிலாளர்கள் மிரட்டியதாக பொய் வழக்கும் பதிவு செய்துள்ளனர். இத்திட்டம் கைவிடப்படும் வரை இப்போராட்டம் தமிழக அளவில் மிகப்பெரிய போராட்டமாக தொடரும் என்றனர்.

What do you think?

‘டாக்ஸிக்’ டிரெய்லர் விழாவில் நயன்தாரா மாஸ்!

நாமக்கல் பரமத்தி வேலூர் ராஜராஜேஸ்வரி ஐயப்பன் மடாலயத்தில் மழை வேண்டி மகா வருணயாகம்