in ,

தூத்துக்குடி தொழில் வளர்ச்சி கலந்துரையாடல் கூட்டம்: அமைச்சர் ஸ்ரீநாத் பங்கேற்பு

தூத்துக்குடி தொழில் வளர்ச்சி கலந்துரையாடல் கூட்டம்: அமைச்சர் ஸ்ரீநாத் பங்கேற்பு

தூத்துக்குடியில் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கம் (ICCI), தூத்துக்குடி சார்பில் “தொழில்துறையில் முன்னேறிய மாவட்டமாக உருவெடுத்து வரும் தூத்துக்குடி” என்ற தலைப்பில் கலந்துரையாடல் கூட்டம், தூத்துக்குடி மாடத்தூர் பைபாஸ் சாலையில் உள்ள ICCI கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் டி. சரத்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உரையாற்றினர்.

பின்னர் கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தின் தொழில் வளர்ச்சி, புதிய முதலீட்டு வாய்ப்புகள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தொழில் சார்ந்த பல்வேறு அம்சங்கள் குறித்து தொழில் முனைவோர், வணிகர்கள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகளுடன் விரிவான கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.

மேலும், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு ICCI தலைவர் டி.ஆர். கோடீஸ்வரன் தலைமை வகித்தார். செயலாளர் கே. பொன்வெங்கடேஷ் முன்னிலை வகித்தார். தொழில்துறையினர், வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

What do you think?

நடிகர் ராம் சரண் மணிக்கட்டு அறுவை சிகிச்சைக்குப் பின் நலமுடன் உள்ளார்

பொய் புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது; தமிழக வெற்றிக்கழக வழக்கறிஞர்கள் மனு