பொய் புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது; தமிழக வெற்றிக்கழக வழக்கறிஞர்கள் மனு
தமிழக வெற்றிக்கழக வழக்கறிஞர் தாக்கியதாக லிங்க குமார் என்பவர் அளித்த புகார் பொய் புகார் அந்த இடத்திற்கு அவருக்கு உரிமை கிடையாது அமைச்சர் ஸ்ரீநாத் வெற்றிக்காகவும் திமுகவிற்கு எதிராகவும் தமிழக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செயல்படுவதால் அவர் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது துப்பாக்கி வைத்து மிரட்டவில்லை காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது பொய் புகார் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழக வெற்றி கழக வழக்கறிஞர் அணியினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு
கடந்த சில நாட்களுக்கு முன்பு மடத்தூர் பகுதியில் இடப் பிரச்சினை தொடர்பாக லிங்க குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை தாக்கியதாக தமிழக வெற்றிக்கழக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஜேசுதாஸ் உள்ளிட்ட சிலர் மீது லிங்க குமார் என்பவர் புகார் அளித்தார் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
இதைத்தொடர்ந்து இன்று தமிழக வெற்றிக்கழக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஜேசுதாஸ் உள்ளிட்ட தமிழக வெற்றி கழக வழக்கறிஞர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத்தை சந்தித்து மனு அளித்தனர்
லிங்க குமார் என்பவர் பொய்யான புகார் அளித்துள்ளார் மடத்தூரில் உள்ள இடம் லிங்க்குமாருக்கு பாத்தியமானது கிடையாது அது மனோகர் என்பவரது உறவினருக்கு பாத்தியப்பட்ட இடம் இந்த இடம் தொடர்பான பிரச்சனைகளில் வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஜேசுதாஸ் ஆஜராகி வருகிறார் இதன் காரணமாக அவர் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது
மேலும் தமிழக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஜேசுதாஸ் அமைச்சர் ஸ்ரீநாத் வெற்றிக்காகவும் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கைது செய்யப்படும் போது நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக்கழக வழக்கறிஞர் சார்பாக அவர் தமிழக முதல்வர் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க காரணமாக இருந்தார் இதன் காரணமாக திமுகவிற்கு எதிராக செயல்படுவதால் திமுகவினர் இவர் மீது பொய் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர் எனவே ஜேசுதாஸ் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.


