in

மாணவர்களை கண்டித்து போஸ்ட் செய்த நடிகர் சித்தார்த்

மாணவர்களை கண்டித்து போஸ்ட் செய்த நடிகர் சித்தார்த்

மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கும் சமயத்தில் நடிகர் சித்தர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது எனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனக்கு நிறைய பரிந்துரைகள் வந்து கொண்டிருக்கின்றன.

எங்களது போஸ்டுகளுக்கு கமெண்ட் செய்தால் நன்றாக இருக்கும். நான் நன்றாக படிப்பேன், நன்றாக தேர்வு எழுதுவேன், என் எதிர்காலத்தை நான் நன்றாக திட்டமிடுவேன், இந்த நாட்டை காப்பாற்றுவேன் என்றெல்லாம் ஏராளமானோர் பதிவிட்டு வருகிறார்கள்.

முதலில் நன்றாக படித்து நல்ல விதமாக தேர்வு எழுத வேண்டும் என்றால் செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு சமூக வலைதளங்களை விட்டு விலகுங்கள் நல்லவிதமாக படித்து தேர்வு எழுதுங்கள். இது போன்ற பதிவுகள் எல்லாம் ஆபத்தானது என்று தான் நான் சொல்லுவேன். இதுபோன்ற பதிவுகளுக்கு நான் நிச்சயம் கமெண்ட் செய்ய மாட்டேன்.

மேலும் இதை நான் இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் சமூக வலைத்தளத்தில் தான் இருக்கிறீர்களே உபயோகமாக மாணவர்களுக்கு எதுவும் செய்யாமல் இருகின்றேன் என்று அர்த்தம் ஆகிவிடும் என்று கோபமாகவும் அன்பாகவும் கண்டித்து பதிவிட்டுள்ளார்.

What do you think?

சுவேதாரண்யேஸ்வரர் கோவில் இந்திரப் பெருவிழா தேரோட்டம்

எனக்கு இசையை பிச்சையாக போட்டது இளையராஜா .. கண்கலங்கி பேசிய பாடகர் மனோ