in

ராமேஸ்வரத்தில் மகர் நோன்பு நிகழ்ச்சி: அம்பாள் சூரனை அம்பு எய்து வதம்:

ராமேஸ்வரத்தில் மகர் நோன்பு நிகழ்ச்சி: அம்பாள் சூரனை அம்பு எய்து வதம்:

ராமேஸ்வரத்தில் நடைபெற்ற மகர் நோன்பு நிகழ்ச்சியொட்டி அருள்மிகு பர்வதவர்த்தினி அம்பாள் சூரனை அம்பு எய்து வதம் செய்தார்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இந்த ஆண்டு நவராத்திரி திருவிழா கடந்த 10ம்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

இதையடுத்து காலையில் கோவிலின் அம்பாள் சன்னதி பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள கொலு மண்டபத்தில் அம்பாளின் அபூர்வ தங்க ஸ்ரீ சக்கரத்திற்கு பால், பன்னீர், இளநீர், திரவியம், மாபொடி, மஞ்சப்பொடி, சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்றது. ஸ்ரீ சக்கரத்திற்கு செய்யப்படும் பூஜையானது நேரடியாக அம்பாளுக்கு சென்றடைவதாக பக்தர்களின் நம்பிக்கை.

பின்னர் மாலை நேரத்தில் அம்மன் சன்னதி பிரகாரத்தில் அருள்மிது பர்வதவர்த்தனி அம்பாள் அன்னபூரனி, துர்க்கை, மகாலெட்சுமி உள்ளிட்ட பல அவதாரங்களில் அலங்கரிக்கபட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்நிலையில் நவராத்திரி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகர் நோன்பு இன்று மாலை நடைபெற்றது. மகர் நோன்பு நிகழ்ச்சிகாக சுவாமி-அம்பாள் தங்க குதிரை வாகனத்தில் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலில் இருந்து எழுந்தருளி பத்திரகாளி அம்மன் கோவில் அருகே உள்ள மகர் நோன்பு திடலுக்கு சென்று அங்கு சூரனை அம்பு எய்து அம்பாள் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு தீப ஆராதனை நடைபெற்றது. இதில் உள்ளுர் மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்நிகழ்வையொட்டி சுவாமி அம்பாள் கோவிலில் இருந்து புறப்பட்டு மகர் நோன்பு திடலுக்கு சென்றதால் ராமநாதசுவாமி திருக்கோவில் நடை மாலை முதல் இரவு வரை சாத்தப்பட்டது.

What do you think?

நாமக்கல் வாசவி கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தில் நவராத்திரி விழா கோலாகலம்!

Casino ohne Anmeldung Lizenz: Alles, was du wissen musst