in

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உண்டியல் காணிக்கை

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உண்டியல் காணிக்கை

 

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டத்தில் ஒரு கோடி 20 லட்சம் ரூபாய் காணிக்கை கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவிலானது காசிக்கு நிகரான புண்ணிய ஸ்தலமாகவும், தீர்த்தம், மூர்த்தி, ஸ்தலம் என்ற மூன்று பெருமைகளையும் கொண்ட கோவிலாக உள்ளது.

நாடு முழுவதும் பிரசித்தி பெற்ற கோவிலாக இருக்கும் இங்கு பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து, உண்டியலில் காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர்.

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், கோவில் நிர்வாகம் சார்பில் மாதந்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுகிறது.

இன்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கோவிலின் கிழக்கு கோபுர மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தன்னார்வலர்கள், கோவில் ஊழியர்கள் என‌ ஏராளமானோர் கலந்து கொண்டு காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

உண்டியல் காணிக்கை எண்ணி முடிக்கப்பட்டதில் ஒருகோடி இருபது லட்சத்து நாற்பத்தி நான்காயிரத்து தொண்ணூற்று ஐந்து ரூபாய் பணம், 14 கிராம் தங்கம், 1 கிலோ 405 கிராம் வெள்ளி, 191 வெளிநாட்டு பணங்கள் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

What do you think?

பாம்பன் பழைய ரயில் தூக்குப்பாலம் அகற்றும் பணி

பத்திர எழுத்தர்களின் உரிமையைப் பறிக்கும் செயலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்