in ,

சசிகலா காலில் விழுந்தது ஏன் எடப்பாடி புதிய விளக்கம்


Watch – YouTube Click

சசிகலா காலில் விழுந்தது ஏன்? எடப்பாடி விளக்கம்

நான் ஏன் சசிகலா காலில் விழுந்து வணங்கினேன் என எடப்பாடி பழனிச்சாமி மதுரையில் விளக்கம் அளித்துள்ளார்.

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் உதயநிதி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவருமே ஒருவருக்கொருவர் வார்த்தை போரிலும், புகைப்படங்கள் காட்டியும் விமர்சனம் செய்து வருகின்றனர். “செங்கலை காட்டத்தப்பா. போர் அடிக்குது” என இபிஎஸும், “நான் கல்ல காட்டுறேன், எடப்பாடி பழனிச்சாமி பிரதமரிடம் பல்ல காட்டுறாரு” என உதயநிதியும் மாறி மாறி விமர்சனம் செய்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேசும் போது, எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக கட்சி நிர்வாகிகள் மத்தியில் சசிகலா அறிமுகம் செய்தபோது எடப்பாடி பழனிச்சாமி சசிகலா காலில் விழுந்து வணங்கிய புகைப்படத்தை எடுத்து காண்பித்து ‘பாதம்தாங்கிய பழனிச்சாமி’ என விமர்சனம் செய்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

இந்நிலையில், இன்று மதுரையில் அதிமுக வேட்பாளர் சரவணனின் தேர்தல் பணிமனை அலுவலகத்தை திறந்து வைத்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சசிகலா காலில் விழுந்தது பற்றி விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில் , நான் என்ன மூன்றாவது நபரின் காலிலா விழுந்தேன். வயதில் மூத்தவர்களிடம் ஆசி வாங்குவதில் எந்த தவறும் இல்லை என அதற்கான விளக்கத்தை அளித்தார் எடப்பாடி பழனிச்சாமி.


Watch – YouTube Click

What do you think?

வீடு தோறும் கருப்புக்கொடி ஏந்தி தேர்தலை எதிர்த்துப் போராடும் கிராமம்

2000 ரூபாய் நோட்டுகளை ஏப்ரல் 1 ஆம் தேதி மாற்ற முடியாது