in

பாம்பன் பழைய ரயில் தூக்குப்பாலம் அகற்றும் பணி

Ramanathapuram: Railway officers inspect the old Pamban railway bridge, in Ramanathapuram district, Tuesday, Jan. 21, 2025. (PTI Photo)(PTI01_21_2025_000271B)

பாம்பன் பழைய ரயில் தூக்குப்பாலம் அகற்றும் பணி

 

பாம்பன் பழைய ரயில் தூக்குப்பாலத்தினை 80 சதவீதம் அகற்றும் பணிகள் நிறைவடைந்துள்ளது‌. இம்மாத இறுதியில் அனைத்து பணிகளும் நிறைவடையும் என பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் பாம்பன் கடலில் ரயில் பாலம் ஆங்கிலேயரால் அமைக்கப்பட்டு 1914-ம் ஆண்டு ரயில் போக்குவரத்து துவங்கி நடைபெற்று வந்தது.

நூற்றாண்டுகளை கடந்து ராமேஸ்வரம் வரும் மீனவர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயணம் செய்து வந்த ரயில் பாலம் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

பின் நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலம் என்ற பெருமை உடன் புதிய ரயில் பாலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திறந்து பயணிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

இதன் பின் உறுதித்தன்மை இழந்த இப்பாலம் கப்பல்கள் கடந்து செல்லும் போது இயக்க கடினமான இருப்பதால் அதனை அகற்ற முடிவு செய்து டெண்டர் விடப்பட்டது.

New Pamban Bridge பிப்ரவரி மாதம் துவங்கிய இப்பணி ஒரு பகுதியை கடந்து ஜூலை மாதம் முழுவதும் அகற்றினர். அதன்படி மற்றொரு பகுதியை அகற்றும் பணி தொடர்ந்தது நடைபெற்று வந்தது.

இந்நிலையில், தற்போது மற்றொரு பகுதியினை அகற்றும் பணி 80 சதவீதம் அகற்றும் பணி நிறைவடைந்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நவம்பர் மாதம் இறுதிக்குள் முழுமையாக அகற்றப்படும் என பணியாளர்கள் தெரிவித்தனர்.

நூற்றாண்டுகளாக இயங்கி வந்த இப்பாலத்தினை நினைவு சின்னமாக வைக்க வேண்டும் என்பது‌ ராமேஸ்வரம் தீவு மக்களின் கோரிக்கையாக உள்ளது. ஆனால் இதனை அகற்றி இதுபோன்ற மாதிரியை உருவாக்கி ராமநாதபுரத்தில் வைப்பதாக ரயில் அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

What do you think?

ராகவேந்திரர் 50-வது வார பூஜை

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் உண்டியல் காணிக்கை