in

தஞ்சை பெரியகோயிலில் மஹாவாராஹி அம்மனுக்கு சந்தன அலங்காரம்; திரளான பக்தர்கள் தரிசனம்

தஞ்சை பெரியகோயிலில் மஹாவாராஹி அம்மனுக்கு சந்தன அலங்காரம்; திரளான பக்தர்கள் தரிசனம்

தஞ்சாவூர் பெரியகோயில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெருவுடையார் திருக்கோயிலில் தனிசன்னதியாக உள்ள மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோயிலில் உள்ள மஹாவாராகி அம்மனுக்கு மட்டுமே நடைபெறும், வேறெங்கும் நடைபெறுவது இல்லை, இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி விழா .

தஞ்சை பெரியகோயிலில் மஹாகணபதி ஹோமத்துடன் சிறப்பாக துவங்கிய நிலையில் 4வது நாளான இன்று சந்தன அலங்காரம் செய்யப்பட்டு தீபாரனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்.

10நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெறும்,இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாராஹி அம்மனை வழிபட்டனர்

What do you think?

சாய்பாபா சிறப்பு பூஜை மங்கள ஆர்த்தி தரிசனம்

74ம் ஆண்டு தூய கார்மேல் மலைமாதா ஆலய சகடை தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது