in

உலக குருதி கொடை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

உலக குருதி கொடை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

 

உலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு குருதி கொடை விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஶ்ரீகாந்த் துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனையில் உலக குருதி கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு பயிற்சி செவிலியர்கள் குருதி கொடை அளிப்பதற்கு உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்ட மேலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். மேலும் மூன்று முறைக்கு மேல் குருதி கொடை வழங்கியவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.

பின்னர் குருதி கொடை அவசியத்தை குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார் விழிப்புணர்வு பேரணியானது மயிலாடுதுறை நகரத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று நகர பூங்காவில் நிறைவு பெற்றது.

நிகழ்ச்சியில் தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள் 200 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

What do you think?

செஞ்சி சிங்கவரம் அரங்கநாதர் கோவிலில் தேரோட்டம் .

ஸ்ரீ காந்தாரி அம்மன் ஆலய கும்பாபிஷேக சிறப்பு யாகசாலை பூஜை