in

தமிழகத்தில் 2வது வானியல் ஆய்வகம் குத்தாலத்தில் திறப்பு

தமிழகத்தில் 2வது வானியல் ஆய்வகம் குத்தாலத்தில் திறப்பு

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தமிழகத்தில் இரண்டாம் முறையாகவும் வானியல் ஆய்வகம் திறக்கப்பட்டுள்ளது.இதில் பூமி,நிலவு, செவ்வாய்க் கிரகம்,இரவு – பகல் எப்படி வருகிறது,

வானம் எப்படி நீல நிறமாக மாறுகிறது உள்ளிட்ட வானியல் நிகழ்வுகளைப் பள்ளியிலிருந்து கொண்டே மாணவர்கள் நேரடியாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். குத்தாலம் அரசு மேல்நிலைப்பள்ளி பழைமையானது.

இதில் சுமார் 1200 மாணவர்கள் படிக்கின்றனர்.இங்கு வளர்மிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3.81 லட்சம் மதிப்பில் வானியல் ஆய்வகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு முதன்மை கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலர் உமாசங்கர், பேரூராட்சி செயல் அலுவலர் இரா.ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளியின் தலைமை ஆசிரியர் குமார் அனைவரையும் வரவேற்றார்.

விழாவில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ஜமால் முஹம்மது யூனுஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஆய்வகத்தை திறந்து வைத்தார்.இதில் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜம்புகென்னடி,முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் இரா. மனோகரன்,மதிமுகவின் மாநில இளைஞர் அணி செயலாளர் ப.த.ஆசைத்தம்பி,காங்கிரஸ் கட்சி பிரமுகர்கள் சூர்யா,சண்முகம்,செந்தில் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

What do you think?

புதுச்சேரி மாநிலத்திலிருந்து காரில் கடத்தி கடத்திவரப்பட்ட 2016 மதுபான பாட்டில்கள் மற்றும் கார் சீர்காழியில் பறிமுதல்

திருவாடானை அருகே சவுடு மண் அள்ள எதிர்ப்பு; ஜேசிபி, டிராக்டர்களுடன் சென்ற நபர்கள்