in

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடுகள் தீக்கிரையானது


Watch – YouTube Click

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடுகள் தீக்கிரையானது

 

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த கீழதண்ணிலப்பாடி ஆற்றங்கரை தெருவில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

விவசாயம் மற்றும் தின கூலி வேலைக்கு செல்லும் இப்பகுதியினர் வழக்கம் போல வேலைக்குச் சென்றிருந்தனர்.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக இங்கர்சால் என்பவரின் வீட்டில் தீப்பிடித்து மளமளவென எறிய தொடங்கியது. இந்த தீயானது அருகிலுள்ள சைனம்பு என்பவரது வீட்டிற்கு பரவியதோடு அவரது வீட்டில் உள்ள 2 சிலிண்டர்களும் அதிக சத்தத்துடன் வெடித்து இதனால் அடுத்தடுத்து உள்ள சேகர், மாரியப்பன், க.முருகையன், நா.முருகையன், சந்தானம், நாகப்பன் ஆகியோர் வீடுகளில் தீ பற்றி முழுவதுமாக தீயில் எறிந்து நாசமானது.

இதில் சேகர் என்பவரின் இல்ல காதணி விழா கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் காதுகுத்திற்காக வாங்கிய கடனை கூட இன்னும் அடைக்கவில்லை அதுக்குள்ள வீட்டுல உள்ள பொருள் காதனி விழாவில் வந்த பணம் பொருள் எல்லாம் தீயில எரிஞ்சு நாசமா போச்சு என கண்ணீரோடு ஒரு குடும்பம் கதறியதோடு மட்டுமின்றி வீட்டில் இருந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் சான்றிதழ் வீட்டு மனை பட்டா, கட்டில், பீரோ மிக்சி ஃபேன் , டிவி விவாசய பொருள் உள்ளிட்ட சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான வீட்டு உபயோகப் பொருட்களும் தீயில் முழுவதுமாக எரிந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நாகப்பட்டினம் மற்றும் வேளாங்கண்ணி தீயணைப்பு நிலையத்திலிருந்து விரைந்த இரண்டு தீயணைப்பு மீட்பு ஊர்தி மூலம் வீரர்கள் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தண்ணீரை பீச்சி அடித்த நிலையில் உயிர் சேதம் மட்டும் ஏற்படாமல் தடுக்க முடிந்தது.

வீடு மற்றும் தங்களது உடமைகளை இழந்த மக்கள் நிர்கதியாக தவித்து வருவது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது. பட்டா வைத்துள்ள இவர்களுக்கு அரசு சார்பில் காங்கிரட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுமா என்பது கீழ தண்ணீலபாடி கிராம மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

நாகை அருகே எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தீ விபத்தினால் 8 கூரை வீடுகள் தீயில் எரிந்து நாசமான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

திமுக கள்ள ஓட்டு போட முயற்சி செய்வார்கள் என பிரேமலதா விஜயகாந்த் குற்றச்சாட்டு

 அடிப்படை வசதிகள் இல்லை நாங்கள் எதற்கு ஓட்டு போட வேண்டும்  எதிர்ப்பை தெரிவிக்கும் பொதுமக்கள்