in

 அடிப்படை வசதிகள் இல்லை நாங்கள் எதற்கு ஓட்டு போட வேண்டும்  எதிர்ப்பை தெரிவிக்கும் பொதுமக்கள்


Watch – YouTube Click

 அடிப்படை வசதிகள் இல்லை நாங்கள் எதற்கு ஓட்டு போட வேண்டும்  எதிர்ப்பை தெரிவிக்கும் பொதுமக்கள்

 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஒன்றியம் அரசங்குடி ஊராட்சியில் தொண்டமான்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமம் ஒரு தனித்தீவு போல காட்சியளிக்கிறது. இந்த பகுதி மக்களுக்கு தேவையான அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் சரியாக செல்லவில்லை கூறப்படுகிறது.

மேலும் இப்பகுதியில் அடிப்படை தேவையான குடிநீர், கழிவு நீர் வடிகால், சாலை உள்ளிட்ட வசதிகள் சரியாக இல்லாமல் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அவசர காலத்திற்கு ஆம்புலன்ஸ் தீயணைப்பு வாகனங்கள் உள்ளே வர இயலாத நிலை உள்ளது. இந்த கிராமத்தில் இருந்து பேருந்து நிறுத்தம் வருவதற்கு சுமார் 5கி.மீ தூரம் சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது.

மேலும் தொண்டைமான் பட்டி கிராமத்தில் இருந்து வயல்வெளி வழியாக சுமார் 500 மீட்டர் தொலைவில் திருவெறும்பூர் – கிளியூர் சாலை உள்ளது. இந்த வயல்வெளி பகுதியில் புதிய தடத்தை உருவாக்கி தார்சாலை அமைத்தால் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் வந்து செல்ல எளிதாக இருக்கும் எனவும், இது குறித்து அரசு அதிகாரிகளிடமும், அமைச்சர் மற்றும் அரசியல் கட்சியினரிடமும் மனு அளிக்கப்பட்டதாகவும், ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என அப்பகுதியினர் கவலை தெரிவிக்கின்றனர்.

மேலும் மழைக்காலங்கள் மற்றும் விவசாய நடுவு பணிகள் நடைபெறும் போது வயல்வெளி வழியாக பேருந்து நிறுத்தத்திற்கு செல்ல இயலாத நிலை உள்ளது.
இது குறித்து அப்போது மக்கள் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லாததால் இன்று கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி கட்டிங் கிராமத்தின் நுழைவுப் பகுதியில் தேர்தல் புறக்கணிப்பு பதாகை நிறுவியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த திருவரம்பூர் தாசில்தார் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் போது அப்போது மக்கள் தாசில்தாரை முற்றுகையிட்டனர். மேலும் தங்கள் பகுதிக்கு எவ்வித அடிப்படை வசதி செய்து தரப்படாமல் உள்ளதால் நாங்கள் இந்த தேர்தலை புறக்கணித்தே தேர்வோம் என்று தாசில்தாரிடம் திட்டவட்டமாக கூறினர்.

மேலும் தங்கள் பகுதிக்கு எவ்வித அடிப்படை வசதி செய்து தரப்படாமல் உள்ளதால் நாங்கள் இந்த தேர்தலை புறக்கணித்து தருவோம் என்று தாசில்தாரிடம் திட்டவட்டமாக கூறினர். ஓட்டு கேட்டு வரும்போது மட்டும் தங்கள் பகுதிக்கு அதிசயங்களும் இது செய்கிறோம் என்று கூறி வருகிறார்கள் ஓட்டு வாங்கிய பின் பகுதிக்கு வந்து கூட பார்ப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டுகின்றனர் தங்கள் பகுதிக்கு அதிசயங்களும் இதை செய்கிறோம் என்று கூறி வருகிறார்கள் ஓட்டு வாங்கிய பின் பகுதிக்கு வந்து கூட பார்ப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடுகள் தீக்கிரையானது

நான் அவர் மகளாக வாழ ஆசைபடுகிறேன்.. மற்றவர்களுக்கு விளக்கம் கொடுக்க அவசியம் இல்லை… சக்தி மகேந்திரா