in

மயிலாடுதுறையில் பணி நிரந்தரம் கோரி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பருவகால பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்:-

மயிலாடுதுறையில் பணி நிரந்தரம் கோரி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பருவகால பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்:-

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலக வளாகத்தில், 2014 முதல் 2021-ஆம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த பருவகால பணியாளர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பருவ கால பணியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் சந்திரமோகன் தலைமையில் கபில்தேவ் ஜெயமன் லாரன்ஸ் முன்னிலையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மண்டல அலுவலகத்தின் பிரதான நுழைவுவாயில் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர். தங்களது நீண்டகால கோரிக்கையை கருத்தில் கொண்டு, அரசின் விதிமுறைகளுக்கு ஏற்ப தங்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும் என்றும், பல ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் நிலையில், இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படாததால் குடும்ப வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி வரும் தங்களைப் போன்ற பருவகால பணியாளர்களின் கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக பரிசீலித்து, பணி நிரந்தரத்திற்கான அரசாணையை விரைந்து வெளியிட வேண்டும் என வலியுறுத்தினர்.

போராட்டத்தின் போது, “பணி நிரந்தரம் செய்ய வேண்டும்”, “நீண்டகால பணிக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும்”, “வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற பதாகைகளை கையில் ஏந்தி
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

What do you think?

மயிலாடுதுறையில் ஸ்ரீ கள்ளக்குறிச்சி மகா மாரியம்மன் ஆலய அக்னி கப்பரை திருவிழா: வீதிகள் தோறும் பக்தர்கள் தீபாராதனை எடுத்து வழிபாடு:-

புதுச்சேரியில் நாளை முதல் காலவரையற்ற கோழி விற்பனையாளர்கள் வேலைநிறுத்தம்; 600-க்கும் மேற்பட்ட கடைகள் மூடல்